MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நம்ரதாவுக்காக சூப்பர் ஸ்டார் மகளை நிராகரித்த மகேஷ் பாபு!

நம்ரதாவுக்காக சூப்பர் ஸ்டார் மகளை நிராகரித்த மகேஷ் பாபு!

டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நம்ரதாவை காதலிக்கும் போது சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய நிலையில் அந்த புரபோசலை மகேஷ் பாபு மறுத்துள்ளார்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Oct 10 2024, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tollywood Actor Mahesh Babu

Tollywood Actor Mahesh Babu

டோலிவுட் திரையுலகில் மிஸ்டர் மிஸ்டர் பர்ஃபெக்ட் என பெயர் எடுத்தாதவர் நடிகர் மகேஷ் பாபு. சர்ச்சைக்கு அப்பாற்பட்ட பிரபலமாக உள்ள இவர், பல சமயங்களில் தன்னை ஒரு சிறந்த கணவராகவும்,  நல்ல தந்தையாகவும் வெளிகாட்டிக்கொள்ள மறந்து இல்லை. சினிமாவுக்கு பின்னர் இவருடைய குடும்பம்தான் அவருடைய உலகம். ஓய்வு நேரம் கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார். இல்லையென்றால் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் பொழுதை கழிப்பார். இது தான் அவர் அதிகம் விரும்புவதும்.

என்ன தான் மகேஷ் பாபு ஒரு சினிமா பிரபலம் என்றாலும், தனியார் விருந்துகளில் இவரை பார்ப்பது மிகவும் அரிது. வீட்டில் தன்னுடைய குழந்தைகளுடன் குழந்தையாக மாறி...  கௌதம், சித்தாராவுடன் விளையாடுவார். புதிய படங்கள், மற்றும் புத்தகங்களைப் படிப்பது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அதேபோல் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Mahesh babu Marriage

Mahesh babu Marriage

இவை அனைத்தையும் விட மகேஷ் பாபு ரசிகர்கள் பார்வையில் அழகானவர். நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹீரோ. இவர் திருமணத்திற்கு முன்பும் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காத ஒரு பிரபலமாகவே இருந்தார். எனவே தான், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா, மகேஷ் பாபுவை தன்னுடைய மருமகனாக்கி கொள்ள விரும்பினார். 

இதுகுறித்து மகேஷ் பாபுவிடம் பாலகிருஷ்ணா. தன்னுடைய மூத்த மகள் பிரம்மணியை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா என கேட்டுள்ளார்? சற்றும் இதை எதிர்பாராத மகேஷ் பாபு மெதுவாக பாலகிருஷ்ணாவின் திட்டதை நிராகரித்துள்ளார்.

டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!
 

35
Mahesh babu and Namratha

Mahesh babu and Namratha

அப்போது மகேஷ் பாபு நடிகை நம்ரதாவை காதலித்து வந்ததால் தான் பிரம்மணியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலகிருஷ்ணா பிரம்மணியை, லோகேஷுக்கு திருமணம் செய்து வைத்தார். மகேஷ் திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாரா லோகேஷ்-பிரம்மணி திருமணம் நடந்தது. பாலகிருஷ்ணா மகேஷை மருமகனாக ஆக்க முயன்றதாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும் , தெலுங்கு மீடியாக்களில் இந்த செய்தி அதிகம் பேசப்படும் ஒன்றாக இருந்தது.  

மகேஷ் பாபு வம்சி படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த நம்ரதாவை காதக துவங்கினார்.  நம்ரதாவும் காதலில் மிகவும் உறுதியாக இருந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு நமிரதாவை மகேஷ் பாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினரும் திருமணத்தில் கலந்து கொண்ட போதிலும், மகேஷ் திருமணம் குறித்த தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும் இவர்கள் திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தான் இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்தது.

45
Mahesh Babu Reject Balakrishna Proposal

Mahesh Babu Reject Balakrishna Proposal

சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, போல் திரையுலகமே மெச்சும் வகையில் வாழ்ந்து வருகிறார்கள். மகேஷ் பாபு நடிகர் என்பதை தாண்டி, சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஏழை குழந்தைகளின் மருத்துவ உதவி, அறுவை சிகிச்சை, கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை உதவிகளையும் செய்து வருவதால்...  மகேஷ் பாபு சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார்.

பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?

தற்போது மகேஷ் பாபு தனது 29வது படத்திற்கு தயாராகி வருகிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. சுமார் ரூ.800 கோடி இந்த படத்தின் பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தனது 29வது படத்தின் அப்டேட்டை வழங்கினார். பொதுவாக மூன்று முதல் நான்கு வாரங்களில் கதையை தயார் செய்து விடுவோம். மகேஷ் பாபுவுக்காக கதையை இறுதி செய்ய 2 ஆண்டுகள் ஆனது என்று கூறினார். 

55
Mahesh Babu 29th movie update

Mahesh Babu 29th movie update

ஜனவரி மாதம் முதல் 29வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று விஜயேந்திர பிரசாத் முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். 29வது படம் ஒரு காட்டு அதிரடி சாகச நாடகம். உலகம் முழுவதும் சுற்றித் திரியும் சாகசக்காரராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் இருக்குமாம். ஏற்கனவே மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். அவர் அடர்ந்த தாடி, நீண்ட முடியுடன் காணப்படுகிறார். எனவே இவரது 29வது படத்தில் மகேஷ் பாபுவின் தோற்றத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved