MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!

டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!

ஓவ்வொரு நாளும் ரசிகர்கள், சின்னத்திரையில் விரும்பி பார்க்கும்... தொடர்களின் இந்த வார டாப் 10 டிஆர்பி பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Oct 10 2024, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 10 Serial TRP

Top 10 Serial TRP

டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடிக்க தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வாரமும் முட்டி மோதி வருகிறது. இந்நிலையில், இந்த வருடத்தின் 40 ஆவது வாரத்தில், டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம்பிடித்த சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த மூன்று வாரங்களாகவே கயல் - எழில் திருமணத்தை வைத்தே நகர்ந்து வரும் 'கயல்' சீரியல் தான் இந்த வாரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரமே எழில் மற்றும் கயலின் திருமணம் நடந்து முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை திருமணம் நடக்கவில்லை. ஆனால் பல ரூபங்களில் இவர்களின் திருமணத்தை நிறுத்த பிரச்சனைகள் மட்டும் வந்து கொண்டே உள்ளது. இந்த சீரியல், 9.59 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Singapennea and Moonru Muduchu

Singapennea and Moonru Muduchu

இதை தொடர்ந்து, சிங்க பெண்ணே சீரியலை பின்னால் தள்ளிவிட்டு... இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது மூன்று முடிச்சு தொடர். இந்த சீரியலிலும் தற்போது ஹீரோ சூர்யாவின் திருமண ஏற்பாடுகள் தான் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனினும் ஹீரோ எப்படி ஏழை வீட்டு பெண்ணான கதாநாயகி நந்தினியை திருமணம் செய்து கொள்வார்?  என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த தொடர் 8. 35 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.

முதல் இடத்தில் இருந்து... மெல்ல மெல்ல பின்னுக்கு வந்து, இந்த வாரம் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது சிங்க பெண்ணே தொடர். தன்னுடைய தோழிக்காக உயிரை பணயம் வைத்து பல சாகச வேலைகளில் ஈடுபட்ட ஆனந்தி, சுவர் ஏரி குதிக்கும் போது வார்டன் கையில் சிக்கி உள்ளதால்... ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்படுவாரா? என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல், 8.26 TRP புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் அன்பு மீதான காதலை ஆனந்தி வெளிப்படுத்துவாரா? அன்பு தான் அழகன் என்பதை அறிந்து கொள்வாரா? ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருமா? என இந்த சீரியலை சுற்றி பல கேள்விகள் சுழன்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?

35
Marumagal and Sundari serial

Marumagal and Sundari serial

இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில், மருமகள் சீரியல் உள்ளது. பிரபு - ஆதிரை திருமணத்தை நிறுத்த ஒரு கும்பல் காத்திருக்கும் நிலையில், இவர்களின் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக  நடந்து வருகிறது. குறிப்பாக பிரபுவின் காமெடியான நடிப்பும் ஆதிரையின் போல்டான நடிப்பும் இந்த சீரியலின் மிகப்பெரிய பலம் என கூறலாம். மருமகள் சீரியல், இந்த வாரம் 7.98 TRP புள்ளிகளுடன் நான்காவது இடத்தை கைப்பற்றி உள்ளது.

இந்த வாரம் 5-ஆவது இடத்தில் சுந்தரி சீரியல் உள்ளது. இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்த தொடரில், எப்படியும் தமிழ் பாப்பாவை தன்னுடன் அழைத்து சென்று விட வேண்டும் என கார்த்திக் நினைத்துக் கொண்டிருக்க, சுந்தரி மற்றும் விஜய்யின் காதல் ட்ராக் இன்னொரு புறம் சென்று கொண்டிருக்கிறது. விஜய்யின் அம்மா தற்போது சுந்தரி மீது கோவமாக இருக்கும் நிலையில், அவர் மனம் மாறி சுந்தரியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா? என்கிற பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 7.85 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.

45
Siragadikka Aasai and Ramayanam

Siragadikka Aasai and Ramayanam

விஜய் டிவியில் நம்பர் 1 TRP சீரியலான...  சிறகடிக்க ஆசை தொடர் தற்போது டாப் 5 பட்டியலில் இருந்து வெளியேறி 6-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. வழக்கமான குடும்பத்தை என்றாலும், பல சுவாரஸ்யமான காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெறுகின்றன. இந்த தொடரில் தற்போது நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாட்டம் ஒருபுறம் களைகட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை சத்யா மீது கோபமாக இருந்த முத்து மனம் மாறி சத்யாவுக்காக கல்லூரிக்கு சென்று பேச முடிவு செய்துள்ளார். இந்த தொடர் 7. 76 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 7-வது இடத்தில், சன் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் டப்பிங் ஆன்மீக தொடரான ராமாயணம்' 6.89 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.

டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!

55
Pandian Store, Malli and Baakiyalakshmi

Pandian Store, Malli and Baakiyalakshmi

இதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு, 8-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது பாண்டியன் ஸ்டோர் சீரியல். தங்கமயில் படிப்பு விஷயத்தில் சிக்குவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்... அதில் எஸ்கேப் ஆகி இருந்தாலும்,  ஹோட்டல் விஷயத்தில் சரவணன் தன்னுடைய தம்பிக்காக உண்மையை உடைத்து மயில் மீது உள்ள தவறை போட்டுடைத்தார். இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர் சீரியல்,  6 .74 பிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.

அதே போல் சன் டிவியின் சீரியல்களில் ஒன்றான 'மல்லி' சீரியல் தான் இந்த வாரம் 9-வது இடத்தை பிடித்துள்ளது. அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தைக்கு, அம்மாவாக நடிக்க வரும் மல்லி... நிரந்தரமாக அம்மாவாக மாறுகிறார். இந்த தொடர் 6.58 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.

இந்த வாரம் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாகவே இந்த சீரியலின் டிஆர்பி மளமளவென சரிந்துள்ளது. இனியாவின் டான்ஸ் நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் 10-ஆவது இடத்தில், 5. 99 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved