ஐயப்ப பத்தர்கள் உணர்வை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் இசைவாணியின் கானா பாடல்!
பிக்பாஸ் பிரபலமான இசைவாணி, ஐயப்ப பக்தர்கள் உணர்வு புண்படும் வகையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பாடியுள்ள பாடலுக்கு, எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
Isaivani Controversy
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் தன்னுடைய கானா பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி இசைவாணி. இவர் சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கானா பாடல்கள் பாடியுள்ள நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்ட்டில் இணைந்து பல்வேறு சுயாதீன பாடல்களை பாடியதன் மூலம் தான் அதிகம் கவனிக்கப்பட்டார்.
Isaivani Hide Marriage Secret
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இசைவாணி, பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மிகவும் வயது குறைந்த போட்டியாளராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு வயது 22 என கூறப்பட்டது. ஆனால் அவர் தன்னுடன் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த சதீஷ் என்பவரை காதலித்து 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார். பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி அவர் எதுவும் வாய்திறக்கவில்லை என்றாலும் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.
விஜய் டிவி 'மகாநதி' சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்; யாருக்கு அதிகம் தெரியுமா?
Bigg Boss Isaivani
பிக்பாஸ் வீட்டில் இருந்து 49 நாட்களில் வெளியேறிய இசைவாணி... பல மேடை நிகழ்ச்சிகளில் பிசியாக பாடி கொண்டிருக்கிறார். வெளிநாடுகளுக்கும் சென்று பல பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில், இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டி பார்க்கும் விதமாக பாடியுள்ள பாடல் தான், இசைவாணியை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
Isaivani Aiyyapan Song
கார்த்திகை மாதம் பிறந்தாலே, சபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து, உடலையும் - மனதையும் தூய்மையாக வைத்து கொண்டு, 2 மாதங்கள் கடுமையாக விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதை லட்சக்கணக்கான பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஐயப்பன் சன்னிதிக்கு பெண்கள் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன.
நாக சைதன்யா - சோபிதா விருப்பம் போல் நடக்கும் திருமணத்தில் என்ன ஸ்பெஷல்? நாகர்ஜுனா பகிர்ந்த தகவல்!
Isaivani Trouble
அதாவது 10 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டுமே செல்லவேண்டும். ஆனால் இசைவாணியில் பாடலில் இளம் வயது பெண்களும் வந்தால் என்ன தப்பு என கேள்வி கேட்கும் நோக்கத்தில் உள்ளது. எனவே இவரின் பாடல் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் விதத்தில் உள்ளது என பிரச்சனை வெடித்துள்ளது.
Isai Vani Song Controversy
ஒவ்வொரு ஆண்டும் பா ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மார்கழியில் மக்களிசை என்கிற இசை நிகழ்ச்சியில் தான் இப்படி ஒரு பாடலை பாடியுள்ளார் இசைவாணி. இந்த பாடலில், "ஐ ஆம் சாரி ஐயப்பா... நா உள்ள வந்தா என்னப்பா... நான் தாடி காரன் பேபி.. இப்போ காலம் மாறி போச்சு! நீ தள்ளி வச்சா தீட்டா... நான் முன்னேறுவேன் மாசா! என்று பாடலை பாடியுள்ளார்". இந்த பாடலால் தற்போது இசைவாணியை இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என் தந்தை ஒரு சாதனையாளர்; அவரை பற்றிய அவதூறு வருத்தமளிக்கிறது! ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் குமுறல்!