பணப்பெட்டி மிஸ் ஆனா என்ன; ஜெஃப்ரிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆன கானா பாடகர் ஜெஃப்ரி வாங்கிய சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Gana Jeffrey
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் முதல் மூன்று நாட்கள் போட்டியாளர்களின் குடும்பத்தினரும், நான்காவது நாள் அவர்களின் நண்பர்களும் வருகை தந்திருந்தனர். இதனால் கடந்த வாரம் முழுக்க பாச மழையில் நனைந்தது பிக் பாஸ் வீடு. இருப்பினும் வார இறுதியில் எலிமினேஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்று அதில் இருவர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.
Bigg Boss Jeffrey
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சனிக்கிழமை எபிசோடி ஜெஃப்ரி வெளியேறினார். கானா பாடகரான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் பெறும் முனைப்போடு வந்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த சீசனில் பணப்பெட்டி எடுக்கும் முனைப்போடு இருந்த ஒரே போட்டியாளரும் ஜெஃப்ரி தான். ஆனால் பணப்பெட்டி வரும் முன் அவர் எலிமினேட் ஆனது பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸுக்கே விபூதி அடித்த ஜாக்குலினை கையும் களவுமாக சிக்க வைத்த பவித்ரா!
Bigg Boss Jeffry Eliminated
பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை பலர் எலிமினேட் ஆகி இருந்தாலும், ஜெஃப்ரி எலிமினேட் ஆனபோது தான் அனைவருமே கண்கலங்கினர். விஜய் சேதுபதியே ஜெஃப்ரியின் எலிமினேஷனால் எமோஷனல் ஆனார். அவர் மேடைக்கு வந்ததும் அவரது தோல் மேல் கை போட்டு, அவருக்கு தன் வாழ்த்துக்களை கூறி வழியனுப்பி வைத்தார். ஜெஃப்ரி பணப்பெட்டியை எடுக்க தவறினாலும் அவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார் பிக் பாஸ்.
Jeffrey Salary
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் கம்மி சம்பளம் வாங்கியவர் ஜெஃப்ரி தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது அவர் இருந்த 83 நாட்களுக்கு அவருக்கு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். பிக் பாஸ் வீட்டில் நன்கு கேம் விளையாடி வந்த போட்டியாளர்களில் ஜெஃப்ரியும் ஒருவராக இருந்ததால் அவரின் எலிமினேஷன் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... யார் என்ன சொன்னாலும் நீ தான்டா என் ஹீரோ; அருணிடம் ஃபீலிங்ஸை கொட்டிய அர்ச்சனா!