பிக் பாஸுக்கே விபூதி அடித்த ஜாக்குலினை கையும் களவுமாக சிக்க வைத்த பவித்ரா!
Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்கின் போது ஜாக்குலின் செய்த தில்லாலங்கடி வேலை தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் ஒரு நாளாவது இருக்க முடியுமா என்று கேட்டால் அது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் 100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல், செல்போன் இல்லாமல் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தால் என்ன செய்வீர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 8-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஹவுஸ்மேட்ஸ், வெளியுலகில் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நைசாக கேட்டு தெரிந்துகொண்டனர். இந்த டாஸ்கின் போது ஒரு தில்லாலங்கடி வேலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்... என்னை கல்யாணம் பண்ணிப்பியா? பிக் பாஸ் பிரபலத்திடம் லவ் புரபோஸ் பண்ணிய செளந்தர்யா
பிக் பாஸ் போட்டியாளராக உள்ள ஜாக்குலினின் குடும்பத்தில் இருந்து அவரது தயாரும், அவரது நண்பர் மற்றும் தோழி உள்ளே வந்துள்ளனர். இதில் ஜாக்குலினின் தோழியாக வந்தவர் தான் அவருக்கு டிசைனராகவும் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஜாக்குலின் அணியும் விதவிதமான ஆடைகளை அவர் தான் அனுப்பி வைப்பாராம். அப்படி அந்த ஆடையை ஒரு Code word ஆக பயன்படுத்தி இத்தனை நாட்கள் ஜாக்குலின் விளையாடியது தெரியவந்துள்ளது.
அதாவது வெளியில் தனக்கான இமேஜ் ஒவ்வொரு வாரமும் எப்படி இருக்கிறது என்பதை இந்த ஆடைகள் மூலம் ஜாக்குலின் தெரிந்து வந்ததாக கூறப்படுகிறது. உதாரணத்துக்கு பச்சை நிறத்தில் டிரெஸ் வந்தால் நன்றாக விளையாடுகிறார். சிகப்பு நிறத்தில் டிரஸ் வந்தால் டேஞ்சர் ஜோன் என ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ப முன்கூட்டியே பேசி வைத்து வந்துள்ளதாகவும் அதுபற்றி ஜாக்குலினின் டிசைனர் உள்ளே வந்த போது வாய்தவறி உளறியதாகவும் பவித்ரா கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜாக்குலின் பிக்பாஸுக்கு விபூதி அடிச்சிருக்காரே என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... யார் என்ன சொன்னாலும் நீ தான்டா என் ஹீரோ; அருணிடம் ஃபீலிங்ஸை கொட்டிய அர்ச்சனா!