யார் என்ன சொன்னாலும் நீ தான்டா என் ஹீரோ; அருணிடம் ஃபீலிங்ஸை கொட்டிய அர்ச்சனா!
Arun Prasath Lover Archana : பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும், சீசன் 8 போட்டியாளர் அருண் பிரசாத்தின் காதலியுமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அருண் பிரசாத், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தவர். அவர் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவை காதலிப்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இருவரும் தங்கள் காதலை பொதுவெளியில் அறிவித்ததில்லை. பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா ஜெயிக்க அவருக்கு உறுதுணையாக இருந்தது அருண் பிரசாத் தான் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காதலியை கப் அடிக்க வைத்த அருண் பிரசாத் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கும் முனைப்போடு விளையாடி வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் ப்ரீஸ் டாஸ்கில் அருண் பிரசாத்தின் பெற்றோர் நேற்று வந்திருந்தனர். அப்போது முத்துக்குமரனின் கேமில் முரண்பாடு இருப்பதாக கூறி அவருக்கு சில அட்வைசுகளை கூறிய அருணின் தந்தை, மேலும் ஒரு அதிர்ச்சி தகவலையில் வெளியிட்டார். அதைக்கேட்டு சக போட்டியாளர்களும் ஷாக் ஆகினர்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் 8-ல் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இந்த சண்டைக்கோழி தானா?
அது என்னவென்றால், பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருக்கும் அருண் பிரசாத்தும் முத்துக்குமரனும் நெருங்கிய உறவினர்களாம். இது அவர்கள் இருவருக்குமே இத்தனை நாட்களாக தெரியாது. நேற்று அருண் பிரசாத்தின் தந்தை இந்த தகவலை சொன்னதும் பகையெல்லாம் மறந்து அருணும், முத்துவும் பாசமழை பொழிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்ததும் எந்த வகையில் உறவு என்பதை கூறுவதாக அருணின் தந்தை சொல்லிவிட்டு சென்றார்.
இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து அருண் மீள்வதற்குள் இன்று அவரின் காதலியான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இவங்க தான் என்னோட ஹார்லி குயின் என தன் காதலி அர்ச்சனாவை அறிமுகப்படுத்திய அருணிடம் இந்த வீட்டுக்குள் உங்க கூட இருப்பேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என சொல்லி கண்கலங்கினார் அர்ச்சனா.
பின்னர், சில அறிவுரைகளை கூறிய அர்ச்சனா, இப்போ நீ எப்படி இருக்கியோ அது ரொம்ப நல்லா இருக்கு, உனக்கு உன் மேல இருக்கும் சந்தேகம் தான் உன்னை கீழே கொண்டு வருது. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். யார் என்ன சொன்னாலும் நீ எப்போதுமே என்னுடைய ஹீரோ தான் என சொல்லி தன் காதலனுக்காக பாடலும் பாடி இருக்கிறார் அர்ச்சனா. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... என்னை கல்யாணம் பண்ணிப்பியா? பிக் பாஸ் பிரபலத்திடம் லவ் புரபோஸ் பண்ணிய செளந்தர்யா