செம்ம ஸ்ட்ரெக்ச்சர்... சேலையில் கூட ஸ்டைலிஷ் பேபியாக மாறி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சேலை அழகில் சமூக வலைத்தளத்தையே தெறிக்கவிடும் லேட்டஸ்ட் போட்டோஸ், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா, போன்ற முன்னணி நடிகைகளுக்கு நிகராக சைலண்டாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராய். நயன்தாராவே சமீப காலமாக கதையின் நாயகியாக நடித்த படங்கள், அடுத்தடுத்து தோல்வியை தழுவுவதால், ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை தேர்வு செய்து நடிக்க தயங்கும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தைரியமாக தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக 'கனா' படத்தின் வெற்றிக்கு பின்னர், ஐஸ்வர்யா ராஜேஷின் காண்பிடென்ட் லெவல் எகிறியுள்ளது. இந்த ஆண்டு இவர் கதையின் நாயகியாக நடித்து வெளியான, 'தி கிரேட் இந்தியன் கிட்சன்', ரன் பேபி ரன், ஃபர்ஹானா, சொர்ப்பன சுந்தரி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியடைந்தது.
'மாமன்னன்' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா? வெளியான தகவல்!
இதை தொடர்ந்து, தற்போது இவரின் கை வசம் நான்கு தமிழ் படமும், மூன்று மலையாள படங்களும் உள்ளது. தெலுங்கில் சில படங்களில் மட்டுமே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தாலும், இன்னும் சொல்லிகொள்ளுபடியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஒரு பக்கம் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நீல நிற சேலையில் செதுக்கிய சிலை போல் இருக்கும் ஸ்ட்ரக்ச்சரை வெளிப்படுத்தும் விதமாக எடுத்து கொண்ட போட்டோஸ் தீயாக பரவி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!
உடல் எடையை குறைத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் சும்மா சிக்குன்னு இருக்கும் அழகில் ஜொலிக்கிறார் என ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் போட்டு வர்ணித்து வருகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3 வெற்றிப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .