கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கல்லாகட்டியதா அவதார் 2 ? - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
இந்தியாவில் முதல்நாளில் அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படம் என்கிற சாதனையை கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பெற்று இருந்தது. அந்த சாதனையை அவதார் 2 முறியடித்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகையே வியப்பில் ஆழ்த்திய படம் என்றால் அது கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் தான். கற்பனையின் உச்சம் என சொல்லும் அளவுக்கு சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது இப்படம். இன்றளவும் உலகளவில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் அவதார் இருந்து வருகிறது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக அறிவித்தனர்.
அந்த அறிவிப்பு வெளியாகி 13 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாகி உள்ளது. 13 ஆண்டு கடின உழைப்புக்கு பின் வெளியாகி உள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் இப்படம் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.
இப்படம் டெக்னிக்கல் ரீதியாக ஆஹா... ஓஹோ என பாராட்டுக்களைப் பெற்று வந்தாலும், திரைக்கதையில் தொய்வு மற்றும் படத்தின் நீளம் ஆகியவை படத்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இதன்காரணமாக இப்படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... ஆர்ஆர்ஆர் முதல் தி காஷ்மீர் ஃபைல்ஸ் வரை டாப் 10 படங்களை ஸ்மார்ட்போனில் பார்ப்பது எப்படி?
இந்தியாவில் முதல்நாளில் அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படம் என்கிற சாதனையை கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பெற்று இருந்தது. அந்த சாதனையை அவதார் 2 முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் இந்திய அளவில் முதல் நாளில் ரூ.45 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாம்.
Image: Google
இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தான் அதிகபட்சமாக ரூ.10 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இப்படம் முதல் நாளில் ரூ.3 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூலித்து உள்ளதாம். தமிழகத்தில் வசூல் இந்த அளவு சரிவை சந்தித்ததற்கு காரணம், இப்படம் நேற்று தமிழகத்தில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட வில்லை. ஷேர் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படம் தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படவில்லை. உலகளவில் இப்படம் 90 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தவறான ரசிகர்கள் கணிப்பு! கடைசியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!