ஆர்ஆர்ஆர் முதல் தி காஷ்மீர் ஃபைல்ஸ் வரை டாப் 10 படங்களை ஸ்மார்ட்போனில் பார்ப்பது எப்படி?

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படம் முதல் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வரை எல்லாம் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அப்படி வெளியான படங்களில் டாப் 10 படங்களை ஸ்மார்ட்போனில் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

How to watch top 10 most popular movies like RRR in your smartphone

வாரந்தோறும் தென்னிந்திய சினிமா முதல் ஹாலிவுட் வரை எத்தனையோ படங்கள் வெளியாகி வருகின்றது. அதில், மாஸ் ஹீரோக்களின் படங்கள், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் குவிக்கிறது. அந்த வகையில் ஐஎம்டிபியின் மாதாந்திர பார்வையாளர்களின் உண்மை பக்கங்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரையில் ரிலீஸான படங்கள் அதிகப்படியாக 7 ரேட்டிங் வாங்கியுள்ளது. அப்படி ரேட்டிங் வாங்கிய டாப் 10 படங்களை எப்படி எந்தவித கட்டணமுமின்றி ஸ்மார்ட்போனில் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

துணிவில்லாமல் வெற்றி இல்லை..! ரியல் ஹீரோ என்பதை நிரூபித்த அஜித் சாதனை குறித்து மேலாளர் போட்ட மாஸ் பதிவு.!

  1. ஆர் ஆர் ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) - நெட்பிளிக்ஸ் (ஜியோ பிளான்)
  2. தி காஷ்மீர் ஃபைல்ஸ் - ஜீ5 (ஜியோ பிளான்)
  3. கேஜிஎஃப் சேஃப்டர் 2 - அமேசான் பிரைம் வீடியோ (ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ)
  4. விக்ரம் - டிஸ்னி + ஹாட்ஸ்டார் (ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ)
  5. காந்தாரா - அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் (ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ)
  6. ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் - அமேசான் பிரைம் (ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ)
  7. மேஜர் - நெட்பிளிக்ஸ் (ஜியோ பிளான்)
  8. சீதா ராமன் - அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் (ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ)
  9. பொன்னியின் செல்வன்: பார்ட் 1 - அமேசான் பிரைம் வீடியோ (ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ)
  10. 777 சார்ளி - வூட் (ஜியோ பிளான்)

2022 ஆம் ஆண்டில்... அரிய வகை நோயால் பாதிக்க பட்ட சமந்தா, பூனம் கவுர் உள்ளிட்ட 5 பிரபலங்கள்!
 

ஏர்டெல், வோடபோஃன் ஐடியா, ஜியோ ஆகிய நிறுவனங்கள் போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீ பெய்டு திட்டங்களில் தொகுக்கப்பட்ட ஓடிடி சந்தாக்களை வழங்குகின்றன. அதோடு, இந்த நிறுவனங்களின் பிராட்பேண்ட் சேவைகளும் ஓடிடி சந்தாக்களை வழங்குகின்றன. இதன் மூலமாக ஸ்மார்ட்போனிலியே இந்த படங்களை பார்க்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios