ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவதார் 2’ திரைப்படம் ஓடிடி-க்கு வந்தாச்சு - எந்தெந்த தளங்களில் ரிலீஸ் தெரியுமா?
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் ரிலீஸாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அவதார் 2 திரைப்படம் தற்போது ஓடிடி-யில் ரிலீஸ் ஆகி உள்ளது.
பிரம்மாண்ட படங்களை இயக்கி உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருபவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் அவதார். கற்பனையின் உச்சமாக கருதப்படும் இப்படத்தின் மூலம் ரசிகர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். உலகளவில் சக்கைப்போடு போட்ட இப்படம் அந்த சமயத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் 290 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது.
அவதார் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த ஜேம்ஸ் கேமரூன், அதற்கான பணிகளிலும் இறங்கினார். சுமார் 13 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் அவர் அவதார் 2 படத்தை எடுத்து முடித்தார். அப்படத்துக்கு அவதார் தி வே ஆஃப் வாட்டர் எனவும் பெயரிடப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் சூர்யா போல்... குட்டியான கெஸ்ட் ரோலில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் - அதுவும் யார் படத்துல தெரியுமா?
அவதார் படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல் அவதார் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காட்சியமைப்பில் பிரம்மிப்பூட்டினாலும் திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவதார் படத்தை விட குறைந்த அளவிலான வசூலையே அவதார் 2 குவித்தது. இப்படத்துக்கு 230 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் இன்று (மார்ச் 28) முதல் அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் இனி வீட்டில் இருந்தபடியே ஜேம்ஸ் கேமரூனின் இந்த பிரம்மாண்ட படைப்பை பார்த்து ரசிக்கலாம். அவதார் 2 திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 4 மாதங்களுக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... போன மாசம் கர்ப்பம்... இப்போ அமீருடன் ரகசிய திருமணம்.. அடுத்து என்ன? பிக்பாஸ் பாவனியின் ஷாக்கிங் ரிப்ளை