சூர்யா 45 படத்தில் இருந்து திடீரென விலகிய ஏ.ஆர்.ரகுமான் - காரணம் என்ன?
AR Rahman Quit Suriya 45 Movie : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விலகி உள்ளார்.
AR Rahman Quit Suriya 45
சூர்யா 45
கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் லப்பர் பந்து புகழ் சுவாசிகாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
suriya 45 Movie Team
ஏ.ஆர்.ரகுமான் விலகல்
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூர்யா 45 திரைப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூர்யா 45 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக இதன் அறிவிப்பு போஸ்டரிலேயே குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஏ.ஆர். ரகுமான் அப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... கங்குவா கசக்குது; புஷ்பா 2-னா இனிக்குதா? பாரபட்சம் காட்டுகிறதா கோலிவுட்!
Suriya 45 movie Poster
நீக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் பெயர்
சூர்யா 45 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போஸ்டர்களில் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. அண்மையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜிகே விஷ்ணு கமிட்டாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெறாததால் அவர் இப்படத்தில் இருந்து விலகியது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
AR Rahman
காரணம் என்ன?
ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் தன் மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்த நிலையில், அவர் அடுத்த ஓராண்டுக்கு சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாக ஒரு செய்தியும் உலா வந்தது. ஒருவேளை அதற்காக தான் சூர்யா 45 படத்தில் இருந்து அவர் விலகிவிட்டாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. அல்லது படக்குழுவுடன் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அப்படத்தில் இருந்து விலகினாரா என பல கேள்விகள் உலா வரும் நிலையில், இதற்கு அவரே விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது வெளியே வரும்.
இதையும் படியுங்கள்... 2024-ல் கோலிவுட் தலையில் தூக்கி கொண்டாடிய டாப் 10 மூவீஸ் - ஒரு பார்வை