கங்குவா கசக்குது; புஷ்பா 2-னா இனிக்குதா? பாரபட்சம் காட்டுகிறதா கோலிவுட்!
Kanguva vs Pushpa 2 : சூர்யா நடித்த கங்குவா படத்தை கொண்டாட தவறிய கோலிவுட், தற்போது புஷ்பா 2 படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.
Kanguva vs Pushpa 2
புஷ்பா 2 படம் தான் தற்போது இந்தியா முழுவதும் டாக் ஆஃப் தி டவுன் ஆக உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. முதல் நாளே ரூ.294 கோடி வசூலித்த இப்படம், மூன்று நாட்களில் 500 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. சொல்லப்போனால் கோலிவுட்டில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமான கோட், ஒட்டுமொத்தமாகவே வெறும் 450 கோடி தான் வசூலித்து இருந்தது. அந்த வசூலை புஷ்பா 2 மூன்று நாட்களில் அள்ளி மாஸ் காட்டி உள்ளது.
Pushpa 2
புஷ்பா 2 திரைப்படம் தமிழ்நாட்டிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகளில ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்து வருகிறது. இப்படி பிற மொழியில் வெளியான பான் இந்தியா படங்களை கொண்டாடித் தீர்க்கும் கோலிவுட், தமிழ் படங்களை திட்டமிட்டு நெகடிவிட்டி பரப்பி காலி பண்ணிவிடுகிறார்களா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... இந்தியா முழுவதும் அடித்து நொறுக்கிய 'புஷ்பா 2'; ரூ.500 கோடி வசூல்; தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
Kanguva
இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம். தமிழ் சினிமாவில் இருந்து வெளியான பக்கா பான் இந்தியா படம் என்றால் அது கங்குவா தான். இப்படம் ரிலீஸ் ஆன போது அதைப் பற்றி பாசிடிவாக ஒரு விமர்சனம் கூட வரவில்லை. முதல் ஷோ பார்த்தவர்கள் எல்லாம் அதில் உள்ள நெகடிவ் விஷயங்களை பெரிதுபடுத்தி பேசியதால், அதில் உள்ள பாசிடிவ் பக்கங்கள் பாராட்டப்படாமலேயே விட்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
Twitter Reaction
அதே வேளையில் தற்போது வெளியாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தில் ஏராளமான லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் நிறைய இடங்களில் டல் அடித்தாலும் அதைப்பற்றியெல்லாம் பேசாமல் படத்தில் உள்ள பாசிடிவ் விஷயங்களை மட்டும் பெரிதுபடுத்தி பேசி, படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கிவிட்டனர். புஷ்பா 2 படத்தில் உள்ள மிகப்பெரிய மைனஸ் அதன் நீளம் தான் சுமார் 3 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு ஓடுகிறது. அதைப்பற்றி யாரும் பேசாததை பார்க்கும் போது தமிழ் படங்களுக்கு மட்டும் பார்சியாலிட்டி பார்க்கிறார்கள் என்கிற கேள்வி எழுவதாக சமூக வலைதள வாசிகள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
X post
தமிழில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களை பற்றி மட்டம் தட்டி பேசுவதும், பிற மொழி படங்கள் சுமாராகவே இருந்தாலும் அதை சூப்பர் என பாராட்டி பேசுவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என ஒருவர் தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். கங்குவா படம் அளவுக்கு புஷ்பா 2 படத்திலும் நெகடிவ் அதிகமாக இருந்தாலும் அது மறைக்கப்படுவது தான் இங்கு புரியாத புதிராக உள்ளது. இதே நிலை நீடித்தால் கோலிவுட்டில் 1000 கோடி வசூல் என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்.
இதையும் படியுங்கள்... கோட் பட லைப் டைம் வசூலை இரண்டே நாளில் தட்டிதூக்கிய புஷ்பா 2!