இந்தியா முழுவதும் அடித்து நொறுக்கிய 'புஷ்பா 2'; ரூ.500 கோடி வசூல்; தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
'புஷ்பா 2' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலிட்டியுள்ளது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அனைத்து படங்களின் சாதனையையும் 'புஷ்பா 2' முறியடித்துள்ளது.
Pushpa 2 worldwide opening box office
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'புஷ்பா 1' திரைப்படத்தை விட 'புஷ்பா 2' படம் பன்மடங்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதாவது 2 நாளில் மட்டும் உலகம் முழுவதும் 'புஷ்பா 2' திரைப்படம் ரூ.500 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இமாலய வசூல் மூலம் பல்வேறு ரிக்கார்டுகளையும் புஷ்பா 2 முறியடித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'பாகுபலி 2' திரைபடம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.112 கோடிக்கு மேல் வசூலிட்டிய நிலையில், 'புஷ்பா 2' முதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
Pushpa 2 collection
இதேபோல் இதேபோல் உலகளவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.222 கோடியுடன் முதல் இடத்தில் இருந்த நிலையில், 'புஷ்பா 2' ரூ.260 கோடி வசூலுடன் அதை அசால்ட்டாக முந்தியுள்ளது. இந்தியில் மட்டும் முதல் 2 நாட்களில் ரூ.140 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என முக்கியமான மொழிகளிலும் 'புஷ்பா 2'வின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.
கோட் பட லைப் டைம் வசூலை இரண்டே நாளில் தட்டிதூக்கிய புஷ்பா 2!
Pushpa 2 collection in india
தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.11.05 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இரண்டு நாளும் சேர்த்து மொத்தம் ரூ.22.25 கோடி வசூல் மழை பொழிந்துள்ளது. தெலுங்கில் முதல் நாளில் ரூ.85 கோடி, இரண்டாவது நாளில் ரூ.40 கோடி என இமாலய வசூல் சாதனை படைத்துள்ளது. மலையாளத்தில் முதல் நாளில் 6.35 கோடி என 2 நாளிலும் சேர்த்து ரூ.8.5 கோடி வசூலித்து சேட்டன்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.
pushpa 2 budget
கன்னடத்திலும் முதல் நாளில் ரூ.22 கோடி என வசூல் வேட்டை நடத்தியுள்ளது. மொத்தத்தில் இரண்டு நாளில் மட்டும் 'புஷ்பா 2' திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலிட்டியுள்ளது. இதில் இந்தியா அளவில் மட்டும் ரூ.295 கோடிக்கு மேல் ஆகும். 'புஷ்பா 2' திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்ற அளவில் இருக்கும். ஆனால் முதல் இர்ண்டு நாளிலேயே படத்துக்காக போட்ட பணத்தை 'புஷ்பா 2' எடுத்து விட்டது.
நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் 'புஷ்பா 2'வின் வசூல் இமாலய உச்சத்துக்கு செல்லும் என எதிபார்க்கப்படுகிறது.
இதெல்லாம் இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடிய பாடல்களா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!