MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2025ம் ஆண்டு தீபாவளி ரேஸில் முதல் ஆளாக குதித்த சிவகார்த்திகேயன்!

2025ம் ஆண்டு தீபாவளி ரேஸில் முதல் ஆளாக குதித்த சிவகார்த்திகேயன்!

2024-ம் ஆண்டு தீபாவளிக்கு அமரன் படம் வெளியாகி வெற்றியடைந்த நிலையில், 2025-ம் ஆண்டு தீபாவளிக்கும் சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jan 27 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தீபாவளி ரேஸில் குதித்த சிவகார்த்திகேயன்!

தீபாவளி ரேஸில் குதித்த சிவகார்த்திகேயன்!

தீபாவளி என்றாலே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி ரிலீஸை தவிர்த்து வருகின்றனர். இதன்காரணமாக தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற வளர்ந்து வரும் முன்னணி நாயகர்கள் ஆக்கிரமித்து விடுகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கார்த்தி மற்றும் எஸ்.கே.வின் படங்கள் தான் அதிகளவில் தீபாவளிக்கு வந்துள்ளன.

24
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

இதில் 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படத்துக்கு போடியாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் ஜப்பான் படம் ரிலீஸ் ஆகி பிளாப் ஆனது. இந்த பிளாப் செண்டிமெண்டை 2024-ம் ஆண்டு தீபாவளி அன்று உடைத்தெறிந்தார் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ் எப்போது தெரியுமா?

34
தீபாவளிக்கு எஸ்.கே.23

தீபாவளிக்கு எஸ்.கே.23

நடிகர் சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் அமரன் படைத்தது. அப்படம் 350 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அமரன் படம் கொடுத்த நம்பிக்கையால் 2025-ம் ஆண்டு தீபாவளிக்கும் தன் படத்தை களமிறக்க தயாராகிவிட்டாராம் எஸ்.கே. அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே.23 திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

44
சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத்

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத்

எஸ்.கே.23 திரைப்படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாம். முன்னதாக நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் தற்போது அப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளதால் தீபாவளி ரேஸில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார் எஸ்.கே. அமரன் போல இப்படமும் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... செல்ஃபி எடுக்க ஹெல்ப் கேட்ட சிவகார்த்திகேயன்: எஸ்கேயின் வளர்ச்சி பற்றி பேசிய எஸ்வி சேகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved