MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ் எப்போது தெரியுமா?

Sivakarthikeyan Parasakthi Movie Release Date : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 27 2025, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parasakthi Teaser, Parasakthi 2025 Movie Release Date

Parasakthi Teaser, Parasakthi 2025 Movie Release Date

Sivakarthikeyan Parasakthi Movie Release Date : அமரன் படத்தின் மூலமாக புதிய உச்சம் தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி ரோலில் அதிகளவில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை வேறொரு கோணத்தில் காட்டியவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்து சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக மாற்றி கொடுத்தது.

25
SK25 Title Teaser, Dawn Pictures

SK25 Title Teaser, Dawn Pictures

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வந்த எந்தப் படமும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் குவித்தது இல்லை. அப்படியிருக்கும் போது அமரன் ரூ.335 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

35
Sivakarthikeyan and Sudha Kongara Movie

Sivakarthikeyan and Sudha Kongara Movie

இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதர்வா, ரவி மோகன், சுதீர் பாபு, அஞ்சலி லாவண்யா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீலீலா இந்தப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில் அவர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

45
Sivakarthikeyan Parasakthi Movie Release Date

Sivakarthikeyan Parasakthi Movie Release Date

ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சில தினங்களுக்க்கு முன்பு வெளியானது. இந்த டீசரில் சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான இந்தப் படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பராசக்தி படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பராசக்தி படமானது வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

55
Parasakthi Teaser, Parasakthi 2025 Movie Release Date

Parasakthi Teaser, Parasakthi 2025 Movie Release Date

இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாவதற்கு முன்னதாக முதலில் சுதா கொங்கரா தாடியை கிளீன் சேவ் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி படத்தின் டைட்டில் டீசரை படமாக்கி சில நாட்களுக்குள் முடித்திருக்கிறது. இதையடுத்து தான் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved