- Home
- Cinema
- ஜனநாயகனை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டிய சென்சார் போர்ட்..? சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் மேல்முறையீடு..
ஜனநாயகனை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டிய சென்சார் போர்ட்..? சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் மேல்முறையீடு..
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஜனநாயகனை விடாது துரத்தும் தணிக்கை வாரியம்
நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கு வரவேற்கு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தனர். ஆனல் படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வருகிறது.
தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு
இதனிடையே சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தரைப்பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முறையிடப்பட்டது. அதன்படி இரு தரப்பு வாதங்களைக் கேட்டுக் கொண்ட தனி நீதிபதி 5 பேர் கொண்ட தணிக்கை குழுவில் 4 பேர் சான்றிதழ் வழங்க சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் ஒருவரது கோரிக்கைக்காக சான்றிதழ் வழங்காமல் இருப்பது தவறு. ஆகவே திரைப்படத்திற்கு குழுவினர் பரிந்துரை செய்த U/A சான்றிதழை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேல்முறையீட்டுக்கு சென்ற தணிக்கை வாரியம்
ஆனால் இந்த தீர்ப்பை ரசிகர்கள் கொண்டாட முடியாத அளவிற்கு அடுத்த குண்டை தணிக்கை வாரியம் தரப்பு போட்டுள்ளது. தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் மேல்முறையீடு செய்யப்போவதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு தினங்கள் சனி, ஞாயிற்றுக் கிழமை, திங்கள் ஒரு நாள் தான் உயர்நீதின்றம் உண்டு. அடுத்ததாக பொங்கல் பண்டிகை வந்துவிடும் நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

