- Home
- Politics
- பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே இருந்திருக்கவே முடியாது.. எச்.ராஜா அதிரடி விளக்கம்..!
பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே இருந்திருக்கவே முடியாது.. எச்.ராஜா அதிரடி விளக்கம்..!
‘’நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும் என நினைத்து இருந்தால் செப்டம்பர் 27-ம் தேதியே கொடுத்து இருப்போம். அப்படி மத்திய அரசு செயல்பட்டு இருந்தால், பிஜேபி செயல்பட்டு இருந்தால், நெருக்கடி கொடுத்திருந்தால், விஜய் வெளியில் வந்திருக்க முடியாது''.

‘‘பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்க முடியாது’’ என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பியது, ஜனநாயகன் படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் சென்சார் போர்டு சர்டிபிகேட்டை தாமதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பாஜக மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘‘காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அவர்கள் ஆட்சியில் நடந்த மாதிரியான நினைப்பிலேயே இருக்கிறார்கள்.
சிபிஐக்கு பெயரை என்ன பெயர் என்றால், ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ அப்படித்தான் அவர்கள் ஆட்சியில் இருந்தது. எல்லா டிபார்ட்மெண்ட்டையும் அவர்களை இயக்கிக் கொண்டு இருந்தார்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். திமுககாரர்களுக்கு தெரியும். திமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கும்போதே ஆ.ராஜாவையும், கனிமொழியையும் ஜெயிலில் போட்டார்கள். ஆ.ராஜாவையும், கனிமொழியையும் ஜெயிலில் போட்டது பாஜக அரசாங்கமா? இல்லை.
காங்கிரஸுக்கு எப்போதுமே கத்தியை முதுகுக்கு பின்னால் வைத்துக்கொண்டு பேரம்பேசக்கூடிய பழக்கம் உண்டு. சென்சார் போர்டு என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. அவர்கள் என்ன பிரச்சனையோ அதுக்கு ஏற்றாற்போல சர்டிபிகேட் கொடுப்பார்கள். பிஜேபி என்றைக்குமே அதிகாரத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்த மாட்டோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும் என நினைத்து இருந்தால் செப்டம்பர் 27-ம் தேதியே கொடுத்து இருப்போம். அப்படி மத்திய அரசு செயல்பட்டு இருந்தால், பிஜேபி செயல்பட்டு இருந்தால், நெருக்கடி கொடுத்திருந்தால், விஜய் வெளியில் வந்திருக்க முடியாது.
அதனால் நாங்கள் எப்பவுமே ஒருவரது பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுப்பதில்லை. சிபிஐ விசாரணத்தை வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பவம் நடக்கும்போது அந்த இடத்தில் இருந்தவர் விஜய். அதனால் அவரைக் கூப்பிட்டு இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
