- Home
- Cinema
- கழட்டிவிட்ட டாப் ஹீரோஸ்... இளம் நடிகருடன் ஜோடி போட்டு கம்பேக் கொடுக்க ரெடியான அனுஷ்கா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்
கழட்டிவிட்ட டாப் ஹீரோஸ்... இளம் நடிகருடன் ஜோடி போட்டு கம்பேக் கொடுக்க ரெடியான அனுஷ்கா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்
அனுஷ்கா மற்றும் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் தயாராகி உள்ள மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி என்கிற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவருக்கு வயது 40-ஐ கடந்துவிட்ட போதும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை டாப் ஹீரோயினாக இருந்து வந்த அனுஷ்கா, அதன்பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைலன்ஸ். மாதவன் நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இதில் காது கேளாத பெண்ணாக நடித்திருந்தார் அனுஷ்கா. அவர் பெரிதும் நம்பி இருந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடும் அப்செட் ஆன அனுஷ்கா, அதன்பின் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்... எனக்கு நண்பர்களே கிடையாது... எங்கு போய் நட்பை தேடுவேன் - நட்புக்காக ஏங்கும் செல்வராகவன்
கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கம்பேக் கொடுக்க தயாராகிவிட்டார் அனுஷ்கா. அவர் நடிப்பில் தற்போது மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனுஷ்கா.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் அனுஷ்கா ஹாப்பி சிங்கிள் என்கிற புத்தகத்தை கையில் வைத்திருக்கிறார். அதேபோல் நவீன் பொலிஷெட்டி ரெடி டூ மிங்கிள் என்கிற வாசகம் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்தபடி அமர்ந்திருக்கிறார். இதன்மூலம் இது ஒரு ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது உறுதியாகி உள்ளது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். நடிகை அனுஷ்கா, தனக்கு பெரிய நடிகர்கள் சான்ஸ் கொடுக்காததால் இளம் நடிகருடன் ஜோடி போட்டு கம்பேக் கொடுக்க தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஆஸ்கர் மேடையை அலங்கரிக்கப் போகும் நாட்டு நாட்டு பாடல் - வெளியான வேறலெவல் அறிவிப்பு