MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anupama Parameswaran : 11 குழந்தைங்க பெத்துக்க ஆசைப்பட்டேன்... கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு - ஆதங்கத்தை கொட்டிய அனுபமா

Anupama Parameswaran : 11 குழந்தைங்க பெத்துக்க ஆசைப்பட்டேன்... கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு - ஆதங்கத்தை கொட்டிய அனுபமா

Anupama Parameswaran Scared of Marriage : திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது என நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 18 2026, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anupama Parameswaran Past Relationship
Image Credit : X/anupamahere

Anupama Parameswaran Past Relationship

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால காதல் அனுபவம் குறித்து பேசியுள்ள இரண்டாவது பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஏற்கனவே அவர் அளித்த முதல் பேட்டி வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பேட்டியிலும் தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த மனவேதனை மற்றும் அந்த உறவு தன்னை எந்த அளவுக்கு பாதித்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் அந்த பேட்டி மிகவும் வைரலாகி வருகிறது.

தான் காதலித்த நபரின் பெயரை அனுபமா இந்தப் பேட்டியிலும் நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும், அந்த உறவில் தான் சந்தித்ததாக கூறப்படும் சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக அன்பாக நடந்து கொள்வதும், அடுத்த நாளே முற்றிலும் மாறுபட்ட வகையில் கடுமையாக நடந்துகொள்வதும், பின்னர் மீண்டும் வந்து மன்னிப்பு கேட்பதும் என அந்த நபரின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரியல் அந்நியன் அவன்... அது ஒரு டாக்ஸிக் காதல் - லவ் பெயிலியர் பற்றி ஆதங்கத்தை கொட்டிய அனுபமா பரமேஸ்வரன்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
11 குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை!
Image Credit : others

11 குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை!

குழந்தைகள் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், திருமணம் செய்து கொண்டு குறைந்தது 11 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த மன அழுத்தமும், அந்த உறவு மூலம் கிடைத்த கசப்பான அனுபவங்களும் தனது எண்ணத்தையே மாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டதாகக் கூறிய அனுபமா, தற்போது திருமணம் என்ற எண்ணமே தனக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவும், திருமணம் செய்து கொள்ளும் ஆசை கூட இல்லாமல் போய்விட்டதாகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

Related Articles

Related image1
Anupama Parameswaran : நீல நிற உடையில் இருக்கும் தேவதை.. அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் போட்டோஸ் இதோ..
Related image2
Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
35
படத்தின் புரமோஷனுக்காக ஏற்பட்ட பிரச்சனை
Image Credit : Instagram

படத்தின் புரமோஷனுக்காக ஏற்பட்ட பிரச்சனை

ஒரு திரைப்படத்தின் புரமோஷனுக்கு தான் செல்லக்கூடாது என அந்த நபர் தடுத்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். மேலும், பெண்களின் மாதவிடாய் குறித்து அந்த நபர் மோசமாக பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது எதிர்ப்பையும் மீறி தான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், இதன் காரணமாக தங்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அந்த சமயத்தில் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோதுகூட தன்னால் பதில் சொல்ல முடியாமல் அழுதுவிட்டதாகவும் அனுபமா நினைவுகூர்ந்துள்ளார்.

45
“சிரிக்கவே மறந்துவிட்டேன்…”
Image Credit : Instagram

“சிரிக்கவே மறந்துவிட்டேன்…”

எப்போதும் மகிழ்ச்சியாகவும், சிரித்தபடியும் இருப்பது தனது இயல்பு என்று கூறிய அனுபமா, அந்த உறவில் இருந்த காலகட்டத்தில் எப்போதும் ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததாக தெரிவித்துள்ளார். அடுத்து என்ன நடக்கும், தன்னிடம் என்ன பேசுவார்கள் என்ற பயத்திலேயே இருந்ததால், இயல்பாக சிரிப்பதையே மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பல இரவுகளை அழுதபடியே கழித்ததாகவும், மறுநாள் படப்பிடிப்புக்கு சென்றபோதும் சாப்பிட முடியாமல் அழுத தருணங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது அந்த கசப்பான காலகட்டத்திலிருந்து வெளியே வந்து, மீண்டும் தனது பழைய இயல்புக்கு திரும்பியிருப்பதாகவும் அனுபமா கூறியுள்ளார்.

55
யாரைப் பற்றி அனுபமா பேசுகிறார்?
Image Credit : Asianet News

யாரைப் பற்றி அனுபமா பேசுகிறார்?

அனுபமா தனது பேட்டியில் காதலித்த நபரின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், பேட்டி வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் குறித்தே அனுபமா பேசுவதாக சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணமாக, இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் காலகட்டத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியானதை ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது அனுபமா, துருவ் விக்ரமை சமூக வலைதளத்தில் அன்பாலோ செய்துவிட்டதையும் நோட் பண்ணிய நெட்டிசன்கள் அதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனுபமா பரமேஸ்வரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Common Man : ஒருத்தர் கூட ரிஜெக்ட் ஆகல... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்..!
Recommended image2
நயன், த்ரிஷாவைவிட ரொம்ப பிஸி... செம டிமாண்ட் உள்ள டாப் 3 ஹீரோயின்கள் யார்... யார் தெரியுமா?
Recommended image3
Vishwanath and Sons Day 4 Box Office : தமிழ்நாட்டில் டிராப்; தெலுங்கில் டாப்..! சூர்யா பட வசூல் நிலவரம் இதோ
Related Stories
Recommended image1
Anupama Parameswaran : நீல நிற உடையில் இருக்கும் தேவதை.. அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் போட்டோஸ் இதோ..
Recommended image2
Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved