- Home
- Cinema
- ரியல் அந்நியன் அவன்... அது ஒரு டாக்ஸிக் காதல் - லவ் பெயிலியர் பற்றி ஆதங்கத்தை கொட்டிய அனுபமா பரமேஸ்வரன்
ரியல் அந்நியன் அவன்... அது ஒரு டாக்ஸிக் காதல் - லவ் பெயிலியர் பற்றி ஆதங்கத்தை கொட்டிய அனுபமா பரமேஸ்வரன்
Anupama Parameswaran About Breakup : நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய காதல் தோல்வி பற்றி முதன்முறையாக பேசி இருக்கிறார். அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

Anupama Parameswaran Love Breakup
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த ஒரு பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மன அமைதிக்காக சில பாதைகளை விட்டுவிட்டு, மீண்டும் தன்னையே கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த பலரும், அனுபமாவின் காதல் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும், கூறி வந்தனர்.
Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
இரண்டு வருட வலி
இந்நிலையில், மலையாள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது கடந்தகால அனுபவங்களைப் பற்றி அனுபமா வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறிய தகவலின்படி, அந்த சமூக வலைதளப் பதிவு திடீரென ஒரு நாளில் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு கிடையாது. அதன் பின்னணியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த வலியும் மன உளைச்சலும் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், மீண்டும் தன்னைப் புரிந்துகொண்டு அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் அனுபமா கூறியுள்ளார்.
காதல் பிரச்சனையை விட கடுமையான அனுபவம்?
தான் எதிர்கொண்டது வெறும் சாதாரண காதல் பிரச்சனை அல்ல என்றும், ‘நார்சிஸிஸ்டிக் அபியூஸ்’ எனக் குறிப்பிடப்படும் உளவியல் ரீதியான துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் நடிகை பேட்டியில் தெரிவித்துள்ளார். சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால், அந்நியன் உடன் இருப்பது போல் இருக்கும். ஒருநாள் ரெமோவாக இருப்பார். பின்னர் அந்நியனாக மாறிவிடுவார். இறுதியாக அம்பி போல் மாறிவிடுவார். காதல் உறவில் முழுமையான நம்பிக்கையுடன் தனது தனிப்பட்ட காயங்கள் மற்றும் பலவீனங்களைப் பகிர்ந்து கொண்டதாக அனுபமா தெரிவித்துள்ளார்.
அக்கறையாக தொடங்கி கட்டுப்பாடாக மாறியது
ஆரம்பத்தில் சில செயல்கள் அன்பு மற்றும் அக்கறையாகவே தோன்றும் என்றும், ஆனால் காலப்போக்கில் அதே விஷயங்கள் கட்டுப்பாட்டாக மாறக்கூடும் என்றும் அனுபமா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். உதாரணமாக, தனக்கு பிடித்த உடையை அணிந்தபோது பாராட்டுவது போன்ற விஷயங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். ஆனால், தொடர்ந்து மற்றவருக்குப் பிடித்த உடைகளையே அணியத் தொடங்கி, பின்னர் என்ன அணிய வேண்டும் என்பதைக்கூட அவரிடம் கேட்கும் நிலை உருவாகிவிடும் என்று அவர் விளக்கியுள்ளார். இவ்வாறு சிறிய விஷயங்களில் தொடங்கிய மாற்றங்கள், தனக்கே தெரியாமல் தனது சொந்த விருப்பங்கள் மற்றும் முடிவுகளை மாற்றியதாக அனுபமா கூறியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
மூன்று மாதங்களிலேயே திருமண பேச்சு
காதலிக்க தொடங்கிய சில மாதங்களிலேயே அந்த நபரின் குடும்பத்தினருக்கு தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். அதன்பிறகு இரு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டதாகவும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் தொடர்பான பேச்சுகள் விரைவாகவே தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, காதல் தொடங்கிய சுமார் மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தத்தை எங்கு நடத்துவது, எத்தனை பேர் கலந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் வரை பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நிச்சயதார்த்தத்தை தான் பலமுறை தள்ளிப்போட்டதாகவும் அனுபமா கூறியுள்ளார். இது சரியான நேரம் இல்லை என்றும், இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இருவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க போதுமான வயதும் காலமும் இருப்பதாகவும் தொடர்ந்து தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பணத்திற்காக மட்டுமே அந்த உறவில் இருந்திருந்தால், நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கான எந்த காரணமும் தனக்கு இருந்திருக்காது என்றும் அனுபமா வேதனையுடன் பேசியுள்ளார்.
அனுபமாவின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அவரது பழைய பதிவும் தற்போது அவர் கூறியுள்ள தகவல்களும் இணைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

