ஆசை நிறைவேறிடுச்சு; குட்நியூஸ் சொன்ன அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான அனிதா சம்பத் தற்போது, தன்னுடைய பல நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இதற்க்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அனிதா சம்பத்:
செய்தி வாசிப்பாளராக இருந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த அனிதா சம்பத்... யாரும் எதிர்பாராத நேரத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். பிக்பாஸ் வீட்டில் எப்போதும் சண்டை கோழியாக அனிதா வலம் வந்தாலும், எந்த இடத்தில் தன்னுடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய முடியுமோ அந்த இடத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம்:
இவரும், பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரியை ஓவராக டேமேஜ் செய்து கொண்டிருந்ததால் இவரை வெளியே அனுப்ப ரசிகர்கள் முடிவு செய்தனர். எனவே மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, வெளியேறினார். பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.
புது படங்களுக்கு - பழைய டைட்டில்; சிவா கார்த்திகேயன் சாதனையை முறியடித்த தனுஷ்!
நடிப்பில் கவனம் செலுத்தும் அனிதா சம்பத்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே, அனிதா சம்பத் சூர்யா நடித்த காப்பான், விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் பிக்பாஸ் ஜோடி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஷரிக்குடன் டான்ஸ் ஆடிய அனிதா சம்பத் டைட்டிலை கைப்பற்றினார்.
அம்மாவுக்கு வீடு வாங்கிய அனிதா சம்பத்:
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்ட அனிதா சம்பத், கெட்ட வார்த்தை பயன்படுத்தியது, தொகுப்பாளர் சிம்புவை விமர்சித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். விஜய் டிவி வாய்ப்பு மூலம், பொருளாதார சூழலிலும் முன்னேற்றத்தை அடைந்த அனிதா சம்பத், கடந்த 2022-ஆம் ஆண்டு புதிதாக வீடு ஒன்றை வாங்கியதாக அறிவித்தார்.
அதே போல் கிரஹப்பிரவேசத்தின் போது கணவருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து அனிதா சம்பத் தன்னுடைய மற்றொரு ஆசையை நிறைவேற்றி உள்ளார்.
நிறைவேறிய அனிதா சம்பத்தின் ஆசை:
சிறு வயதில் இருந்த, தன்னுடைய அம்மாவுக்கு சொந்த வீடு ஒன்றை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்த நிலையில், அந்த கனவு இப்போது நிறைவேறி உள்ளது. தன்னுடைய அம்மாவுக்காக சென்னையில் இவர் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ள நிலையில், இந்த வீட்டின் கிரஹப்ரவேச புகைப்படங்களை பகிர்ந்து இந்த குட் நியூஸை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, வாழ்த்துக்கள் அனிதா சம்பத்துக்கு குவிந்து வருகிறது.