ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... கேரளா புடவை கட்டி அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அவரது ரீல் மகள் அனிகா!
விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்த அனிகா... தற்போது ஹீரோயினாக மாறியுள்ள நிலையில், அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மலையான பைங்கிளியான அனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாகவும் மாறியுள்ளார். தற்போது 17 வயதிலேயே டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகு தேவதையாக மிளிரும் அனிகாவின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த போதே... விதவிதமாக உடைகள் அணிந்து போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்த அனிகா, ஹீரோயின் இடத்தை பிடித்து விட்டால் சொல்லவா வேண்டும்..?
மேலும் செய்திகள்: வெற்றிகரமாக 100 நாள் ஓடி சாதனை செய்த 'விக்ரம்'..! வசூல் மட்டும் இத்தனை கோடியா..? செம்ம ஹாப்பி மூடில் கமல்ஹாசன்
தமிழில் இவர் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்கிற படத்தில், மிகவும் தைரியமாக... 17 வயதிலேயே கர்ப்பிணியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சீதா, வனிதா விஜயகுமார், நீயா நானா கோபிநாத் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதே போல் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான 'கபீலா' என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அனிகா. எனவே இனி குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் கதைகளை விட, ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்களிலில் தான் இவரை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாரதி ராஜா! எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் நடிகை அனிகா தன்னுடைய குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'விஸ்வாசம்' படத்தில் நயன்தாராவுக்கு ரீல் மகளாக நடித்த இவர்... தற்போது ஹீரோயின் தோற்றத்தில் அவருக்கே டஃப் கொடுக்கும் அழகில் வளர்ந்து நிற்கிறார். இதுகுறித்த லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்க இருந்த கதாபாத்திரம் எது தெரியுமா?