- Home
- Cinema
- இன்று எனக்கு கருப்பு நாள்... அரைகுறை ஆடையோடு காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா
இன்று எனக்கு கருப்பு நாள்... அரைகுறை ஆடையோடு காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா
காதலால் மிகுந்த சிரமங்களை சந்தித்த நடிகை ஆண்ட்ரியா, இந்த ஆண்டு காதலர் தினத்தை கருப்பு நாள் என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. இவர் கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் வந்தாலும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. தற்போது இவர் கைவசம் மிஷ்கினின் பிசாசு 2 திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா தான் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் அறிமுகமான புதிதில் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்தார். இதையடுத்து சில ஆண்டுகளிலேயே இவர்களுக்கு இடையேயான காதல் முறிவை சந்தித்தது. அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவும், அனிருத்தும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கல் சுச்சி லீக்ஸில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காதல் முறிவு குறித்து ஆண்ட்ரியா மனம்திறக்காவிட்டாலும், வயது வித்தியாசம் காரணமாகவே தங்களது காதல் பிரேக் அப் ஆனதாக அனிருத் ஒரு பேட்டியில் கூறினார். அனிருத்தைவிட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர் ஆவார்.
இதையும் படியுங்கள்... 2 முறை பிரேக்-அப் ஆனாலும்... காதல் மீதுள்ள நம்பிக்கையை கைவிடாமல் வெற்றிகண்ட நயன்தாராவின் லவ் ஸ்டோரி ஒரு பார்வை
அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் திருமணமான ஒரு பிரபலத்துடன் தகாத உறவில் இருந்ததாகவும் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அந்த உறவால் மன அழுத்தம் ஏற்பட்டு பின்னர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்தபின்னர் அதிலிருந்து மீண்டு வந்ததாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த திருமணமான பிரபலம் யார் என்கிற தகவலை ஆண்ட்ரியா வெளியிடவில்லை.
இப்படி காதலால் மிகுந்த சிரமங்களை சந்தித்த நடிகை ஆண்ட்ரியா, இந்த ஆண்டு காதலர் தினத்தை கருப்பு நாள் என குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி கருப்பு நிற அரைகுறை ஆடையணிந்தபடி போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் தான் சிங்கிள் என்பதையும் சூசகமாக அறிவித்து இருக்கிறார் ஆண்ட்ரியா.
இதையும் படியுங்கள்... விரைவில் திருமணம்... அமீருடன் காதலர் தினத்தை ரொமான்டிக்காக கொண்டாடி அதகளம் செய்யும் பாவனி! போட்டோஸ்!