ஜவானில் ‘ரோலெக்ஸ்’ மாதிரி செம்ம மாஸான கேமியோ ரோல்... விஜய் நோ சொன்னதால் பிரபல மாஸ் நடிகரை தட்டிதூக்கிய அட்லீ
ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக வேறு நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளாராம் அட்லீ.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் அட்லீ. அவர் தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அங்கு அவர் இயக்க உள்ள முதல் திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கின்றனர். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தற்போது படத்தின் ஷூட்டிங் செம்ம ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாஸ் லுக்கில் ராக்கி பாய்... கிளாஸாக வந்த ரிஷப் ஷெட்டி! பிரதமர் மோடியை சந்தித்த KGF மற்றும் காந்தாரா ஹீரோஸ்
இதனிடையே ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம் அட்லீ.
இறுதியாக அவருக்கு ஓகே சொல்லியிருப்பது புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் தானாம். விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக மிரட்டிய சூர்யாவின் கேரக்டர் போல் ஜவானிலும் அல்லு அர்ஜுனுக்கு செம்ம மாஸான கேமியோ ரோலை கொடுத்துள்ளாராம் அட்லீ. விரைவில் அல்லு அர்ஜுன் ஜவான் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாசிடிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய கவினின் டாடா - மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா?