- Home
- Cinema
- பாசிடிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய கவினின் டாடா - மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா?
பாசிடிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய கவினின் டாடா - மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா?
கவின் நடித்துள்ள டாடா படத்துக்கு, தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில்ந் நடித்து பேமஸ் ஆனவர் கவின். இதையடுத்து நட்புனா என்னனு தெரியுமா என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவினுக்கு, அப்படம் பெரிய அளவில் வெற்றியடையாததால், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் கவின். அதன்மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அதில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கவின். அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடித்த முதல் திரைப்படம் லிஃப்ட். திகில் படமான இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்.... அவங்கள மாதிரிலாம் என்னால நடிக்க முடியாதுப்பா... ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய ‘புது’ சந்திரமுகி
லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின் கவின் நாயகனாக நடிக்க கமிட் ஆன திரைப்படம் டாடா. கணேஷ் கே பாபு என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தது.
ரிலீஸான முதல் நாளில் வசூலில் மந்தமாக தொடங்கிய டாடா படத்துக்கு, தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து, சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. இதனால் டாடா படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் கவினுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... நயன்தாரா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்... லேடி சூப்பர்ஸ்டார் மீது பாசமழை பொழிந்த மாளவிகா மோகனன்