இந்தியாவில் கோடி கோடியாய் சம்பாதிச்சும்... ஓட்டுரிமை இல்லாத முன்னணி நடிகர், நடிகைகள் யார்.. யார் தெரியுமா?
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடியாய் கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். அப்படி இந்தியாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர், நடிகைகள் சிலருக்கு நம் நாட்டில் வாக்களிக்கும் உரிமையே இல்லை என்பது ஆச்சர்யமான தகவல் தான். அவர்கள் யார்... யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆலியா பட்
பாலிவுட்டில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றவர் ஆலியா பட். இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனதால் இந்த அளவு உயரத்தை அவரால் எளிதில் எட்ட முடிந்தது. ஆனால் அவருக்கு இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆலியாவின் தாயார் சோனி ரஸ்தான் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர். அதேபோல் ஆலியா பட்டும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதனால் அவருக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை.
அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியாவில் பிறந்தவராக இருந்தாலும், கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் கனடாவில் குடியுரிமை பெற்றார். அதனால் அவருக்கு இந்தியாவில் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்றார் அக்ஷய் குமார்.
கத்ரீனா கைஃப்
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் கத்ரீனா கைஃப். இருப்பினும் இவருக்கு இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் ஹாங்காங்கில் பிறந்தவர். அதுமட்டுமின்றி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பவர். அதனால் இந்தியாவில் அவரால் வாக்களிக்க முடியாது.
இதையும் படியுங்கள்... அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! தனுஷை தொடர்ந்து பாலிவுட்டில் மாஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவரது தந்தை இலங்கையை சேர்ந்தவர், அதேபோல் தாயார் மலேசியாவை சேர்ந்தவர். இவரிடம் இலங்கை குடியுரிமை உள்ளதால் இவருக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை. ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்துவிட்டு இலங்கையில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். பின்னர் பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்த பின் இந்தியா வந்த இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே டென்மார்க்கில் பிறந்தவர் ஆவார். அதனால் இவரிடம் டேனிஸ் குடியுரிமை உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு இந்திய தேர்தலில் வாக்களித்த பின்னர் தான் இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை பொதுவெளியில் அறிவித்தார்.
கல்கி கோச்சலின்
கல்கி கோச்சலின், பாலிவுட் நடிகையான இவர் தமிழிலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விக்னேஷ் சிவனின் பாவக்கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியில் பிறந்தவர். இவரிடம் பிரெஞ்சு குடியுரிமை உள்ளதால் இவருக்கும் இந்தியாவில் வாக்களிக்க உரிமை இல்லை.
இதையும் படியுங்கள்... Chandramukhi 2 : ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2வில் இணைந்த காஜல் அகர்வால்.. பரபரப்பாக பரவும் தகவல்