- Home
- Cinema
- வீட்டில் கூட சுதந்திரமா இருக்க முடியல.. திருட்டுத்தனமாக போட்டோ எடுத்து பரப்பியவர்களுக்கு பளார்விட்ட ஆலியா பட்
வீட்டில் கூட சுதந்திரமா இருக்க முடியல.. திருட்டுத்தனமாக போட்டோ எடுத்து பரப்பியவர்களுக்கு பளார்விட்ட ஆலியா பட்
நடிகை ஆலியா பட்டை திருட்டுத்தனமாக போட்டோ எடுத்து அதனை இணையத்தில் பரவவிட்ட மர்ம நபர்களை அவர் கடுமையாக சாடி உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தனது நீண்ட நாள் காதலனான நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஹா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது குழந்தையை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருதால், நடிகை ஆலியா பட் சில மாதங்களுக்கு சினிமாவைவிட்டு ஒதுங்கியே இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி நடிகை ஆலியா, வீட்டின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தபோது, அதனை எதிர்வீட்டில் இருந்து படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன நடிகை ஆலியா பட், அந்த நபர்களை சரமாரியாக சாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆலியா பட்.
இதையும் படியுங்கள்... கிரிவலமாக வந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம்
அந்த பதிவில், நான் எனது வீட்டில் உள்ள லிவ்விங் ரூமில் மதியம் அமர்ந்து இருந்தபோது, யாரோ என்னை பார்ப்பது போல் தோன்றியது. உடனடியாக மேலே பார்த்ததும் எதிர்வீட்டு மாடியில் இருவர் கேமரா உடன் என்னை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, இதனை எப்படி அனுமதிக்க முடியும். எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது என வெளுத்து வாங்கி இருந்த ஆலியா பட், அதில் மும்பை போலீசையும் டேக் செய்திருந்தார்.
ஆலியா பட்டின் இந்த பதிவு தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. அவருக்கு ஆதரவாக ஏராளமான பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நடிகர் அர்ஜுன் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மா உள்பட ஏராளமானோர் இதுபோன்ற செயல்களை கண்டித்தும், ஆலியா பட்டிற்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... முயற்சித்தும் நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! வேதனையோடு டெல்லி கணேஷ் பகிர்ந்த தகவல்!