முயற்சித்தும் நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! வேதனையோடு டெல்லி கணேஷ் பகிர்ந்த தகவல்!
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில்.. இவரை பற்றிய பல்வேறு தகவல்களை பிரபலங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் ஊடகங்கள் வழியாக பகிர்ந்து கொண்டு வரும் நிலையில், தற்போது பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மயில்சாமியின் நிறைவேறாத ஆசை குறித்து கூறியுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, தன்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக வைத்து வாழ்ந்து வந்தவர். குறிப்பாக மக்களை பெரிதும் பாதித்த சென்னை வெள்ளம், கொரோனா பேரிடர், போன்ற காலங்களில் தன்னிடம் உதவி செய்ய கையில் காசு இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து சென்னையில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு பால் மற்றும் உணவுகளை அளித்தவர்.
முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும், பிறருடன் பேசுவதிலும்.. பழகுவதிலும்.. எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் மிகவும் எளிமையான மனிதரான மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில், இரவு முழுவதும் கண்விழித்து மக்களை பூஜை செய்த நிலையில், திடீரென காலை வீட்டுக்கு வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
Breaking: நடிகர் பிரபுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இதையடுத்து, உடனடியாக அவருடைய மகன்கள் மற்றும் மனைவி ஆகியோர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகர் விவேக்கை தொடர்ந்து, மயில்சாமியின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்த நிலையில், மயில்சாமி குறித்தும், அவரால் உதவி பெற்ற பலர், ஊடகங்கள் வழியாக அவருடைய உயர்ந்த உள்ளம் குறித்தும் பேசி வருவது பார்க்க முடிகிறது.
அந்த வகையில் நடிகர் மயில்சாமி உடன் சில படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தவரும், அவரின் நீண்ட நாள் நண்பருமான நடிகர் ஜெல்லி கணேஷ் மயில்சாமி பற்றி பிரபல ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்ட பகிர்ந்து கொண்டுள்ள தகவலில், அவரால் முயற்சி செய்தும் முடியாமல் போன ஆசை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
மயிலசாமி அரசியலுக்கு வந்து நிறைய சாதிக்க வேண்டும் என ஆசை பட்டார். நான் அரசியலுக்கு வந்து பலரின் கஷ்டங்களுக்கு முடிவு கட்டணும் என்று சொல்வார்.. ஆனால் அது கடைசி வரை நடக்காமல் போய்விட்டது என கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, நடிகர் மயில்சாமி சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால், சிறந்த நடிகர் என்பதை தாண்டி நல்ல அரசியல்வாதி என்றும் பெயரெடுத்திருப்பார் என்பதே பலரது கருத்தாக உள்ளது.