கவர்ச்சி காட்டாமல்... பட்டு புடவை அழகால் கவர்ந்திழுக்கும் 'வாத்தி' ஹீரோயின் சம்யுக்தா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை சம்யுக்தா மேனன், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... பட்டுப் புடவை அழகில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை சம்யுக்தா, கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான 'பாப்கார்ன்' என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதை அடுத்து, தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கலரி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா, வித்யா பிரதீப், ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இரண்டாவது நாயகியாக சம்யுக்தா நடித்திருந்தார்.
'தங்கலான்' படத்திற்காக ஹாலிவுட் நடிகரை இறக்கிய பா.ரஞ்சித்..! வெளியான BTS புகைப்படம்..!
இப்ப படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த படத்தை தொடர்ந்து 'ஜூலை காற்றில்' மற்றும் இருடா ஆகிய படத்தில் நடித்த நிலையில், இரு படங்களும் படு தோல்வியை சந்தித்தது.
தற்போது மலையாளம், தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சம்யுக்தா.
இந்நிலையில் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'வாத்தி' திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து, ரசிகர்களை கவரும் விதமான படங்களை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டுள்ள சம்யுக்தா, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்,
அந்த வகையில், தற்போது பட்டுப்புடவை அழகில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, சம்யுக்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
பக் பக்... மேஜிக் நிகழ்ச்சியில் அந்தரத்தில் நின்று பாடிய பாடகி சித்ரா..! வைரலாகும் வீடியோ..!