கிரிவலமாக வந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம்
கிரிவலமாக சென்று நடிகர் சந்தானம் பழனி முருகனை தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நகைச்சுவர் நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த சந்தானம், சமீப காலமாக நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு முழு நேர ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்களில் சில வெற்றிகண்டாலும், பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் தழுவின. இதனால் மீண்டும் காமெடியனாகவே நடிக்க சந்தானம் திட்டமிட்டு வருவதாக செய்திகளும் வெளியாகின.
இதனை உறுதி செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் சந்தானம். அவர் இப்படத்தில் காமெடி காட்சிகளும் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதற்காக ரூ.10 கோடி வரை சந்தானம் சம்பளம் பேசி கமிட் ஆன நிலையில், இறுதியில் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதால், சந்தானமும் அப்படித்தில் நடிக்க முடியாமல் போனது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை... சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை 4 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் சந்தானம். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இயக்குனர் சுந்தர் சி கலந்துகொண்டு அதனை உறுதி செய்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக இருந்தது. பின்னர் கேட்ட சம்பளம் கொடுக்காததால் கடைசியில் அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக சுந்தர் சி-யே அந்த வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கிரிவலமாக சென்று நடிகர் சந்தானம் பழனி முருகனை தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த வாரம் நடிகை சமந்தா, நடிகர் கவுதம் கார்த்தி, நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தட்டிவிட்டா தாறுமாறு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த துணிவு படத்தின் சில்லா சில்லா வீடியோ சாங் இதோ