ஏகே 64 அப்டேட் : ரஜினி பட இயக்குனருடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் அஜித்!
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 64 திரைப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி நாயகன் அஜித்
நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரிலீசுக்கு ரெடியான குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகளையும் நிறைவு செய்துவிட்ட அஜித் தற்போது கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்ட அவரது அணி மூன்றாம் இடம்பிடித்து அசத்தியது. இதையடுத்து ஐரோப்பா கார் பந்தயத்தில் களமிறங்குவதற்காக தயாராகி வருகின்றார் அஜித்.
இதையும் படியுங்கள்... முதலமைச்சர் பேத்தி நானு; கட்டாயப்படுத்தி அஜித்துடன் நடிக்க வச்சாங்க - பிரபல நடிகை ஓபன் டாக்
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?
கார் பந்தயத்தில் கலந்துகொள்வதால் வருகிற அக்டோபர் மாதம் வரை நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார் அஜித். இருப்பினும் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 64 படத்திற்கான கதையை தொடர்ந்து கேட்டு வருகிறார். அதன்படி அவரது ஏகே 64 படத்தை இயக்க மகாராஜா பட இயக்குனர் நிதிலன், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, கங்குவா இயக்குனர் சிறுத்தை சிவா, பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன், பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் கதை சொன்னதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அஜித்
இதில் நடிகர் அஜித்துக்கு கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால் அவர் தான் ஏகே 64 படத்தின் இயக்குனராக இருக்க அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் தயாராகி இருக்கிறது. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி அஜித் பிறந்தநாளன்று திரைக்கு வர உள்ளது. அன்றைய தினமே ஏகே 64 பட அப்டேட்டையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விஜய்யின் கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய அஜித்தின் விடாமுயற்சி!