MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதலமைச்சர் பேத்தி நானு; கட்டாயப்படுத்தி அஜித்துடன் நடிக்க வச்சாங்க - பிரபல நடிகை ஓபன் டாக்

முதலமைச்சர் பேத்தி நானு; கட்டாயப்படுத்தி அஜித்துடன் நடிக்க வச்சாங்க - பிரபல நடிகை ஓபன் டாக்

முதலமைச்சரின் பேத்தியான தன்னை கட்டாயப்படுத்தி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள் என நடிகை மானு பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2025, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஒரே படத்தில் உச்சம் தொட்ட மானு

ஒரே படத்தில் உச்சம் தொட்ட மானு

நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் காதல் மன்னன். சரண் இயக்கிய இப்படம் கடந்த 1998-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்திருந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் அஜித், சாக்லேட் பாய் ஆக உயர்ந்தார். நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமும் இதுதான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
காதல் மன்னன் நாயகி

காதல் மன்னன் நாயகி

காதல் மன்னன் படத்தின் சக்சஸுக்கு முக்கிய காரணம், அப்படத்தில் அஜித் மற்றும் அப்படத்தின் நாயகி மானு இடையேயான கெமிஸ்ட்ரி தான். நடிகை மானு இப்படத்தின் மூலம் தான் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். ஒரே படத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனாலும் அப்படத்திற்கு பின்னர் அவர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். காதல் மன்னன் படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய மானு திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் கணவருடன் செட்டில் ஆனார். 16 ஆண்டுகள் இந்தியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர், அதன் பின்னர் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்கிற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் சரியாக போகாததால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

34
முதல்வர் பேத்தி

முதல்வர் பேத்தி

இந்த நிலையில், காதல் மன்னன் படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனதன் பின்னணியில் உள்ள ஒரு சீக்ரெட் சம்பவத்தை பற்றி நடிகை மானு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “என்னோட பேமிலியில் யாருமே சினிமாவில் நடித்ததில்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள் தான். என்னுடைய தாத்தா பெயர் கோபிநாத் பர்டோலால், அவர் அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார். நான் என்னுடைய பள்ளி படிப்பதற்காக தான் மெட்ராஸ் வந்தேன்.

44
மனதில் நிற்கும் திலோத்தமா கேரக்டர்

மனதில் நிற்கும் திலோத்தமா கேரக்டர்

நடிகர் விவேக்கும், இயக்குனர் சரணும் தான் நான் ஸ்கூல் படிக்கும்போதே என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வச்சாங்க. அப்படத்திற்கு பின்னர் நான் சினிமாவை விட்டே விலகிவிட்டேன். படிப்பு தான் முக்கியம் என்பதால் அதில் முழு கவனம் செலுத்தினேன். படிப்பை முடித்ததும் திருமணம் செஞ்சுக்கிட்டு செட்டில் ஆகிட்டேன். என் கணவர் சிங்கப்பூரில் மருத்துவராக உள்ளார்” என நடிகை மானு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அவர் நடித்த திலோத்தமா கேரக்டர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய அஜித்தின் விடாமுயற்சி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(6.0 ov) 329 & 28/1
AUSAUS
429
Day 3 - Session 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Recommended image3
OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved