விஜய்யின் கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய அஜித்தின் விடாமுயற்சி!
அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தளபதி விஜய்யின் கோட் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது.

விடாமுயற்சி உருவான கதை
நடிகர் அஜித்தின் 61வது படம் கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. அப்படத்தை முடித்த கையோடு அவரின் 62வது படத்தை இயக்க விக்னேஷ் சிவன் கமிட் ஆனார். அஜித் படத்தை இயக்கும் பணிகளை முழுவீச்சில் செய்து வந்த நிலையில், ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னர் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். அவர் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கியதாக கூறப்பட்டது. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அப்படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட் ஆனார்.
அஜித் ஜோடியாக திரிஷா
இதையடுத்து அப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டு உள்ளதாக கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியானது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தை முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கினர். இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும்.
இதையும் படியுங்கள்.... கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டு வரும் விடாமுயற்சி; 4 நாட்களில் ரூ.92 கோடி வசூல்!
விடாமுயற்சி வசூல்
விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருந்தது. பின்னர் சில பிரச்சனைகளால் அப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. பின்னர் பிப்ரவரி 6ந் தேதி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆன இப்படம் வழக்கமான அஜித் படம் போல் இல்லாததால் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக நெகடிவ் விமர்சனங்கள் அதிகளவில் வந்ததால் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் அடிவாங்கியது. தற்போது வரை விடாமுயற்சி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.
கோட் பட சாதனையை முறியடித்த விடாமுயற்சி
நெகடிவ் விமர்சனங்கள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் மற்றுமொரு மாஸ் சாதனையை படைத்திருக்கிறது. திரைப்படங்களை தர மதிப்பீடு செய்யும் IMDb தளத்தில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு 8.2 ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன கோட் திரைப்படத்திற்கு அந்த தளத்தில் வெறும் 5.8 ரேட்டிங் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், அஜித் படம் அதைவிட அதிக ரேட்டிங் பெற்று கெத்து காட்டி இருக்கிறது.
இதையும் படியுங்கள்.... இந்த ஆண்டில் இதுவே முதல் முறை; 'விடாமுயற்சி' செய்த சாதனை கொண்டாடும் ரசிகர்கள்!