- Home
- Cinema
- இந்த வருஷமும் ‘தல’ தீபாவளியை கொண்டாட பிளான் போடும் விக்னேஷ் சிவன் - காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்
இந்த வருஷமும் ‘தல’ தீபாவளியை கொண்டாட பிளான் போடும் விக்னேஷ் சிவன் - காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்
விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் தயாராக உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் இவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் போது தான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் கல்யாணம் முடிந்தது.
விக்னேஷ் சிவனுக்கு 2022-ம் ஆண்டு மிகவும் சக்சஸ்புல் ஆண்டாகவே இருந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து மே மாதம் அஜித் படத்தையும் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஜூன் மாதம் நயன்தாரா உடன் திருமணம் நடந்தது. அக்டோபர் மாதம் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுடன் சேர்ந்து ஜாலியாக தலை தீபாவளியையும் கொண்டாடினார் விக்னேஷ் சிவன்.
இதையும் படியுங்கள்... கதையை கேட்டு கழட்டிவிட்ட ரஜினி... கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த பிரபல ஹீரோ..?
அதேபோல் இந்த ஆண்டும் விக்னேஷ் சிவனுக்கு தல தீபாவளியாக அமையும் போல தெரிகிறது. விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் தயாராக உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் விக்கி. இது மட்டும் நடந்தால், இந்த வருடமும் அவருக்கு ‘தல’ தீபாவளியாக தான் அமைய வாய்ப்புள்ளது.
ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படம் ரிலீசுக்கு தயாராகி வருவதால் அப்படத்தின் ரிலீசுக்கு பின்னரே ஏகே 62 படம் குறித்தும் அதில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் குறித்தும் அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.
இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.100 கோடி வசூலா...! கோலிவுட்டை மிரளவைத்த ‘சூர்யா 42’ படத்தின் பிசினஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.