கதையை கேட்டு கழட்டிவிட்ட ரஜினி... கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த பிரபல ஹீரோ..?
ரஜினி பட வாய்ப்பு கைநழுவி போனதால், கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு பிரபல ஹீரோ ஒருவர் ஆறுதல் சொல்லி, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம்.
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. இவர் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அனிருத் இசை, லைகா நிறுவனம் தயாரிப்பு என பிரம்மாண்ட கூட்டணியுடன் களமிறங்கிய சிபிக்கு எதிர்பார்த்தபடியே பிரம்மாண்ட வெற்றியும் கிடைத்தது.
டான் திரைப்படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்திருந்தது. இதையடுத்து டான் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது சிபியிடம் தனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்கிற கேட்டுள்ளார். இதைக்கேட்டதும் ரஜினியின் தீவிர ரசிகரான சிபி, இல்லை என்று சொல்லிவிடுவரா என்ன. உடனடியாக ஒரு ஒன்லைனை சொல்லி ஓகே வாங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை ‘தளபதி 67’க்கு லோகேஷ் போட்ட பக்கா பிளான்... எப்புட்ரா என விஜய்யே வியந்துட்டாராம்
பின்னர் அந்த கதையை ஸ்கிரிப்டாக தயார் செய்து வந்த சிபி, இறுதியாக முழுக்கதையையும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினியிடன் சொல்லி உள்ளார். ஆனால் ரஜினிக்கு அந்தக் கதை திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், நோ சொல்லி விட்டாராம். இதனால் கடும் அப்செட்டில் இருந்து வந்துள்ளார் சிபி. அந்த சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான், அவருக்கு போன் பண்ணி ஆறுதல் கூறி உள்ளார்.
ஆறுதல் சொன்னதோடு மட்டுமின்றி தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிபிக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. டான் படத்தில் பணியாற்றியபோதே சிபி சக்ரவர்த்தியின் வேலை அவருக்கு பிடித்துப்போனதால் தற்போது மீண்டும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை சிவகார்த்தியேன் வழங்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... 'கயல்' சீரியலை விட்டு விலகுகிறாரா ஹீரோ சஞ்சீவ்? குழப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பதிவு..!