ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை ‘தளபதி 67’க்கு லோகேஷ் போட்ட பக்கா பிளான்... எப்புட்ரா என விஜய்யே வியந்துட்டாராம்
விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்காவாக பிளான் போட்டு பணிகளை தொடங்கி உள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ள லோகேஷ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளதால், தளபதி 67 படம் குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் இப்படத்தின் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. விஜய் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளதால் நேற்றைய ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இன்றுமுதல் அவர் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
தளபதி 67 படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்காவாக பிளான் போட்டு தான் படத்தின் பணிகளை தொடங்கி உள்ளாராம் லோகேஷ். அதன்படி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் முதல்கட்ட படப்பிடிப்பு பொங்கல் வரை நடைபெற உள்ளதாம். இதையடுத்து காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ள படக்குழு அங்கு 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். பின்னர் சென்னை, டெல்லி, மும்பை என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... அஜித் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போட்ட சென்சார் போர்டு... வெளியானது துணிவு பட சென்சார் சான்றிதழ்
இப்படத்தை பிரம்மாண்டமாக உருவானாலும், ஷூட்டிங்கையும் ஜெட் வேகத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் லோகி. அதன்படி வருகிற மே மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட அவர் பிளான் போட்டுள்ளாராம். இதையடுத்து நான்கு மாதங்களில் பின்னணி பணிகளை முடித்து வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய டார்கெட் செய்துள்ளார்களாம். லோகேஷின் இந்த பிளானை கேட்டு தளபதியே ‘எப்புட்ரா’ என வியந்து போய் கேட்டாராம்.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லன்களாக கவுதம் மேனன், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் தளபதி 67-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 60 வயதிலும் அடங்காத ஆசை! பிரபல நடிகையை 4-வது திருமணம் செய்யும் சீனியர் நடிகர்- லிப்கிஸ் உடன் வெளியான அறிவிப்பு