60 வயதிலும் அடங்காத ஆசை! பிரபல நடிகையை 4-வது திருமணம் செய்யும் சீனியர் நடிகர்- லிப்கிஸ் உடன் வெளியான அறிவிப்பு
3 முறை விவாகரத்து பெற்ற 60 வயது சீனியர் நடிகர் ஒருவர், தற்போது 44 வயது நடிகையை 4-வது திருமணம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
கன்னட திரையுலகில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழிலும் ராதா மோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்யா, ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம், லாஸ்லியா மற்றும் தர்ஷன் நடித்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் அம்மா வேடங்களில் நடித்திருந்தார்.
இவர் ஏற்கனவே சுசேந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து, அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது 44 வயதாகும் பவித்ரா லோகேஷ், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் பரவின.
இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போது 4-வதாக பவித்ரா லோகேஷை அவர் காதலித்து வந்தார்.
இதையும் படியுங்கள்... வீரமே ஜெயம்: மாவீரன் போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்றாக வசித்து வந்ததை அறிந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா என்பவர், அங்கு வந்து இருவரையும் செருப்பால் அடிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணத்துக்கு ஆசைப்பட்டு தான் தனது கணவர் நரேஷை தன்னிடம் இருந்து பவித்ரா லோகேஷ் பிரித்துவிட்டதாக கூறியிருந்தார் ரம்யா.
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத நரேஷ், தற்போது புத்தாண்டை ஒட்டி தனது 4-வது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பவித்ராவும், அவரும் ஜோடியாக கேக் ஒன்றை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு, பின் இருவரும் லிப்கிஸ் கொடுத்து தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதை அறிவித்துள்ளனர்.
இதைப்பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், பல்லு போன வயதில் பக்கோடாவா என நரேஷ் பாபுவை ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகர் நரேஷ் பாபுவுக்கு தற்போது 60 வயது ஆகிறது. இவர் 44 வயது நடிகையான பவித்ரா லோகேஷை திருமணம் செய்ய உள்ளது தான் தற்போது கன்னட திரையுலகில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இதையும் படியுங்கள்... சைலண்டாக ஷூட்டிங் தொடங்கிய தளபதி67 டீம்: முழு வீச்சில் நடந்த முதல் நாள் ஷூட்டிங்!