சைலண்டாக ஷூட்டிங் தொடங்கிய தளபதி67 டீம்: முழு வீச்சில் நடந்த முதல் நாள் ஷூட்டிங்!

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி67 படத்தின் படப்பிடிப்பு இன்று சைலண்டாக தொடங்கப்பட்டுள்ளது.

Vijay Starrer Thalapathy67 Movie Shooting Starts Today directed by Lokesh Kanagaraj

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படம் தளபதி67. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்காலிகமாக தளபதி67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சைலண்டாக தொடங்கப்பட்டுள்ளது.

இது ராஷ்மிகா எடுத்த போட்டோ தான?.. புத்தாண்டு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட விஜய் தேவரகொண்டா

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது. இது குறித்து இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தளபதி67 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். அதே எனர்ஜி, முதல் நாள் படப்பிடிப்பே முழு வீச்சில் நடக்கிறது. தூள் என்று பதிவிட்டுள்ளார்.

Thalapathi 67- shoot starts today...met lokesh and engal thalapathi...same energy and full swing..first day itself..thool...

இதன் மூலம் இந்தப் படத்தில் மனோபாலாவும் நடிப்பதாக தெரிகிறது. எனினும், தளபதி67 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, வாரிசு படம் இன்று சென்சார் சென்றுள்ளது. ஒரே நாளில் தளபதி விஜய் குறித்து இரண்டு அப்டேட் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் 24 மணி நேர டிரைலர் சாதனையை முறியடிக்க தவறிய அஜித் குமாரின் துணிவு!

ஆனால், என்ன இன்னும் வாரிசு படத்தின் டிரைலர் மட்டும் வெளியாகவில்லை. இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், சதீஷ், யோகி பாபு, ஜெயசுதா, வி டி வி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், சம்யுக்தா, குஷ்பு, சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்துள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. அதிலேயும் ரஞ்சிதமே ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு, தீ தளபதி, வா தலைவா ஆகிய பாடல்கள் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

தொடர்ந்து ஏமாறும் ரசிகர்கள்: தளபதி விஜய்யின் வாரிசு டிரைலர் எப்போது வரும்?

சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. இந்த நிலையில், வரும் 4 ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வாரிசு இசை வெளியீட்டு விழாவை வேண்டுமென்றே புறக்கணித்தாரா சங்கீதா?... விஜய்யின் மனைவி ஆப்சென்ட் ஆனது ஏன்?

Important day for #ThalapathyVijay :
1. #Varisu censor today.
2. #Thalapathy67 shoot starts! pic.twitter.com/jfJ2NJ7ilo

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios