பீஸ்ட் படத்தின் 24 மணி நேர டிரைலர் சாதனையை முறியடிக்க தவறிய அஜித் குமாரின் துணிவு!
அஜித் படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் வெறும் 25 மில்லியன் பார்வையாளர்களையும், 1.1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து ஹெச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான 3ஆவது படம் துணிவு. இந்தப் படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியானது. துணிவு படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, பகவதி பெருமாள், மமதி சாரி, பால சரவணன், பிரேம்குமார், மகாநதி சங்கர், அஜய், சிராஜ் ஜானி, சிபி புவனா சந்திரன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து ஏமாறும் ரசிகர்கள்: தளபதி விஜய்யின் வாரிசு டிரைலர் எப்போது வரும்?
வங்கி கொள்ளையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் வங்கியில் கொள்ளையடிப்பவராக நடித்துள்ளார். எப்போது கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். ஆனால், மற்ற படங்களை விட இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப், ஸ்டைல் எல்லாம் மாஸாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேன் கடவுளடா, கேங்க்ஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களையும், 1.1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. என்னதான் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும், தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் டிரைலர் படைத்த சாதனையை முறியடிக்க தவறிவிட்டது. பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தளபதி நடித்துள்ள வாரிசு படமும், அஜித் குமார் நடித்துள்ள துணிவு படமும் வரும் 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் வரும் 4 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘கொன்றால் பாவம்’