கார்கில் போர் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய அஜித்! தீயாக பரவும் புகைப்படங்கள்!
நடிகர் அஜித் சமீபத்தில் லடாக் பகுதியில் எடுத்து கொண்ட புகைப்படம், வெளியான நிலையில்... தற்போது கார்கில் போர் நினைவகத்தில் மரியாதை செலுத்திய சில போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தற்போது பைக் பயணம் செய்து வரும் அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதையும், அதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாக்கி வருவதையும் பார்த்து வருகிறோம், அந்த வகையில் தற்போது அஜித் கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
அஜித் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் எப்போதுமே சற்று வித்தியாசமாகவே இருப்பவர். பல நடிகர்கள், திரைப்பட ஷூட்டிங் மற்றும் உடற்பயிற்சிகள் மேல் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள், ஆனால் அஜித்துக்கு கார் ரேஸிங், பைக் ரேசிங்கில் துவங்கி... பிரியாணி செய்வது முதல் அத்துப்படி.
மேலும் செய்திகள்: செம்ம மாஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' பட தீம் மியூசிக் வெளியானது!
தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் - போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வரும் அஜித், சமீபத்தில் தான்... விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இதற்காக சென்னையில் இருந்து அஜித் விசாகப்பட்டினம் செல்ல ஏர்போர்ட் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாகியது.
விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், இமயமலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு, பைக் ரேஸ் சென்றுள்ளார். அவ்வப்போது இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறார். சமீபத்தில் கூட லடாக் பகுதியில் அஜித் நடிகை மஞ்சு வாரியருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில வைரலான நிலையில் தற்போது அஜித்தின் மற்ற சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: உங்க கூட குழந்தை பெத்துக்கணும்.. No சொல்லவே கூடாது.. ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட கண்டீஷன்! இது தான் காரணமாம்!
இதில் அஜித், கார்கில் போர் வீரர்கள் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் சில ராணுவ வீரர்களுடனும் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார், இந்த புகைப்படங்களை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.