செம்ம மாஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' பட தீம் மியூசிக் வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் தீம் மியூசிக் தற்போது, அதிகார பூர்வமாக சன் பிச்சர்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 படமாக உருவாகி வருகிறது, 'ஜெயிலர்' திரைப்படம். இந்த படத்தை, நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்', விஜய்யை வைத்து 'பீஸ்ட்' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார், இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் இணைந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, வெளியிட்டு படப்பிடிப்பு துவங்கியதை அறிவித்தது படக்குழு.
மேலும் செய்திகள்: 'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா வெளியானது!
இந்த படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதைக்களத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. மேலும் அவ்வப்போது படம் குறித்த சில அப்டேட் வெளியாகி தலைவரின் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.
மேலும் செய்திகள்: உங்க கூட குழந்தை பெத்துக்கணும்.. No சொல்லவே கூடாது.. ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட கண்டீஷன்! இது தான் காரணமாம்!
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தில், சமீபத்தில் வெளியான தகவலின் படி... ரஜினிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாகவும். அதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி பட நடிகர் வஸந்த் ரவி, யோகிபாபு, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் விநாயக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: சமந்தா அணிந்த அதே கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்..! அப்பட்டமா காப்பி அடித்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள்
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக் தற்போது, சன் பிச்சர்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.