சமந்தா அணிந்த அதே கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்..! அப்பட்டமா காப்பி அடித்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள்
சமந்தா அணிந்து போஸ் கொடுத்திருந்த அதே போன்ற கவர்ச்சி உடையை காப்பி அடித்து, தற்போது போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எப்போதுமே தன்னுடைய ஃபேஷனில் அதிக வித்தியாசம் காட்டி, விதவிதமான போட்டோ ஷூட்டுகள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளவர் நடிகை சமந்தா. இவர் வெளியிடும் அதகள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
தனித்துவமான அல்ட்ரா மாடர்ன் உடைகளில் ஜொலிக்கும், சமந்தாவை அப்பட்டமாக காப்பி அடித்து, அவர் அணிந்திருப்பது போன்ற உடையில், தற்போது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: சமந்தாவின் பழைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு... உணர்வு பொங்க அவரது தந்தை போட்ட பதிவு!
தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் சமந்தா - கீர்த்தி சுரேஷ் இருவருமே, தொடர்ந்து தரமான கதைகளையும், கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதே போல் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி உடைகளிலும், கண்களை கவரும் ஹோமிலியான உடைகளிலும் அவ்வப்போது போட்டோ சூட் செய்து, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 'நாதஸ்வரம்' சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண் மகள் ஜீனத்..! வைரலாகும் புகைப்படம்!
சமந்தா எப்படி மாடர்ன் உடைகளை தேர்வு செய்வதில் கெட்டி காரியோ... அதே போல் கீர்த்தி சுரேஷும் தன்னுடைய உடைகளில் அதிக கவனம் செலுத்துபவர். காரணம், இவர் நடிகை என்பதை தாண்டி ஃபேஷன் டிசைனிங் படித்தவர் என்பதால்.
ஆனால், தற்போது கீர்த்தி சுரேஷ், சமந்தா அணிந்து போட்டோ சூட் செய்து வெளியிட்ட அதே உடையில்... அவரை போலவே போஸ் கொடுத்து சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே சமந்தாவின் பேஷனை, கீர்த்தி காப்பி அடித்துள்ளார் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: சேலை அழகில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்!