உங்க கூட குழந்தை பெத்துக்கணும்.. No சொல்லவே கூடாது.. ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட கண்டீஷன்! இது தான் காரணமாம்!
சீரியல் நடிகை மஹாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போதே... உங்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கண்டீஷன் போட்டு தான், திருமணம் செய்து கொண்டதாக தற்போது தெரிவித்துள்ளார்.
ஊர்.. உலகிற்கே.. தெரியாமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்த பின்பே திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ள மஹாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் ஜோடி தான் சமூக வலைத்தளத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக். திருமணம் செய்து கொண்ட கையேடு இருவரும் சேர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு, தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மஹாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, உங்களுடன் நான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும், வயது, மற்றும் பிற காரணங்களுக்காக நோ சொல்லிவிட கூடாது என்று கண்டீஷன் போட்டு தான் திருமணம் செய்து கொண்டாராம். தன்னுடைய இந்த முடிவுக்கு ரவீந்தர் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தது மட்டும் இன்றி, ரவீந்தர் வீட்டு குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்: 'நாதஸ்வரம்' சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண் மகள் ஜீனத்..! வைரலாகும் புகைப்படம்!
மஹாலக்ஷ்மி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம் அவருடைய மகன் சச்சின் தானாம். அவர் தன்னுடன் படிக்கும் சகா மாணவர்களுக்கு தம்பி, தங்கை போன்றவர்கள் இருப்பதை பார்த்து, தனக்கும், தப்பி, தங்கைகள் வேண்டும் என ஆசைப்படுவாராம். இந்த ஆசையை நிறைவேற்ற கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
ரவீந்தரும், மஹாவின் இந்த முடிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தான் தருகிறது. தலை தீபாவளி இன்டர்வியூ கொடுத்த பின்னர், குழந்தையோடு தான் பேட்டி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகைகள் சிலர் அழகு குறைந்துவிடும் என்பதற்காக சமீப காலமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், மஹாலட்சுமி குழந்தை பெற்றுக்கொள்ளவேன் என கூறியுள்ளதற்கு பலரையும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பிரபல நடிகையை கரம் பிடித்த 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ்!