பேமிலியோடு டெல்லி சென்ற அஜித்; ஏகேவுக்கு பத்ம பூஷன் விருது : எங்கு; எப்போது வழங்கப்படும்?
நடிகர் அஜித் குமாருக்கு இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது, இதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார் ஏகே.

Padma Awards 2025: Actor Ajith Kumar Honored with Padma Bhushan ! மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 23 பெண்கள் உள்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம பூஷன் விருதை பொருத்தவரை, கலைத்துறையில் நடிகர் அஜித்குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பெருமைமிகு விருது அஜித்துக்கு வழங்கப்பட உள்ளது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Ajith
அஜித்துக்கு பத்ம பூஷன் விருது
தனக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அஜித் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், இந்திய குடியரசு தலைவரிடம் இருந்து மதிப்பிற்குரிய பத்ம பூஷன் விருதை பெருவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த மதிப்பிற்குரிய மரியாதையை வழங்கிய பிரதமர் மோடிக்கும், குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரத்தை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் என கூறி இருந்தார் அஜித்.
இதையும் படியுங்கள்... விவேக் முதல் அஜித் வரை; பத்ம விருதுகள் வென்ற தமிழ் நடிகர்கள் பட்டியல்
Ajithkumar Family
அஜித்குமார் நெகிழ்ச்சி
அதோடு, இந்த தருணத்தில் தன்னுடைய தந்தை இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறி இருந்த அஜித், என்மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, பல தியாகங்களையும் செய்த எனது தாய்க்கு நன்றி என்றும் அஜித் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கும் நன்றி, எனது மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக ஷாலினி திகழ்கிறார் என்றும் நடிகர் அஜித் அந்த அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.
Ajithkumar Visit Delhi
டெல்லி புறப்பட்ட அஜித்
இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த பெருமைமிகு விருதை பெற்றுக் கொள்ள நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உடன் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை வழங்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... பத்ம பூஷன் விருது வென்ற நடிகர் அஜித்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.