MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மூன்றே மாதத்தில் அஜித் 25 கிலோவுக்கு மேல் எடையை குறைத்து எப்படி? டயட் சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்!

மூன்றே மாதத்தில் அஜித் 25 கிலோவுக்கு மேல் எடையை குறைத்து எப்படி? டயட் சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்!

மிக குறுகிய காலத்தில், அஜித் 25 கிலோ எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா? அவர் கடைபிடித்த பயங்கரமான டயட் குறித்து தற்போது வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

2 Min read
manimegalai a
Published : Jan 11 2025, 02:38 PM IST| Updated : Jan 11 2025, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ajith Weight loos Secret

Ajith Weight loos Secret

நடிகர் அஜித், கார் ரேஸில் பங்கேற்பதற்காக மிக குறுகிய காலத்தில்,  25 கிலோ வரை உடல் எடையை குறைத்ததன் ரகசியம் குறித்து, தற்போது 'பிஸ்மி' தன்னுடைய வலைப்பேச்சு தளத்தில் கூறியுள்ள தகவல்  பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

நடிகர் அஜித் துபாயில் நடக்க உள்ள, 24 மணிநேர கார் ரேசில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். 24 மணிநேரம் நடக்கும் இந்த போட்டியில், அதிக தூரத்தை கடக்கும் அணிதான் வெற்றி பெரும். இதற்கான பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் அஜித், நேற்று கொடுத்த பேட்டி, பட்டி தொட்டி எங்கும் வைரலானது. அப்போது அவர் கூறுகையில், "கார் ரேஸில் 18 வயதில் இருந்தே, ஆர்வம் காட்டி வருகிறேன். 2002 ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் இறங்கினேன். 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில், கார் ரேஸில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்கள் காரணமாக சில வருடங்களாக கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார்.  பல வருடங்களுக்கு பின்னர், மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித், இன்னும் ஒன்பது மாதங்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் முழுக்க.. முழுக்க.. கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தார்.

25
Ajith take break from Cinema 9 Months

Ajith take break from Cinema 9 Months

அஜித்தின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும், எந்த ஒரு நடிகரும் செய்யாத மற்றும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியில் இறங்கியுள்ள அஜித், அதில் வெற்றி பெற வேண்டும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.

விஜய் டிவி சீரியல் வில்லி நடிகை ஸ்ரேயாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்! வைரல் போட்டோஸ்!
 

35
Ajith Upcoming Movie is Vidaamuyarchi and Good Bad Ugly

Ajith Upcoming Movie is Vidaamuyarchi and Good Bad Ugly

அஜித் இன்னும் 9 மாதங்களுக்கு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என்றாலும், அடுத்தடுத்து இவர் நடித்து முடித்துள்ள விடாமுயற்சி மற்றும் 'குட்பேட் அக்லீ' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம், ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரு சில காரணங்களால் லைகா நிறுவனம் இந்த படத்தில் ரிலீசில் தாமதம் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது. இதுவரை 'விடமுயற்சி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அஜித்தின் மற்றொரு திரைப்படமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'குட் பேட் அக்லீ' படம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45
Ajith Diet Secret

Ajith Diet Secret

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள இந்த இரு படங்களும், இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் தற்போது அஜித் தீவிர கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக, 3 மாதத்தில் சுமார் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அஜித் எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கும் நிலையில், இது தொடர்பாக வலைப்பேச்சு பிஸ்மி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

கைப்புள்ள உஷாராதாம்பா இருக்காரு! அஜித் - விஜய் குறித்த கேள்விக்கு ரிபீட் மோடில் தெறிக்கவிட்ட வடிவேலு!
 

55
Bismi Revel Truth

Bismi Revel Truth

அஜித்தின் எடை குறைப்பு குறித்து பேசி உள்ள பிஸ்மி, "அஜித் கடந்த மூன்று மாதங்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல்... வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாகவும், உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் என்பதால் புரோட்டின் பவுடர்களும், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். இதன் காரணமாகவே மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிதாக எந்த ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்தார் என கூறியுள்ளார். குறிப்பாக அஜீத் இந்த மூன்று மாத காலமும் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே இது போன்ற பயங்கரமான  டயட்டை கடைபிடித்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved