விஜய் டிவி சீரியல் வில்லி நடிகை ஸ்ரேயாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்! வைரல் போட்டோஸ்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் வில்லி வேடத்தில் நடித்து மிரட்டி வந்த, ஸ்ரேயாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Sriya Surendran Engagement
விஜய் டிவி தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் திருமண செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் வசந்த் மற்றும் 'பொன்னி' சீரியல் நடிகை வைஷ்ணவிக்கு திருமணம் நடந்தது.
Sriya Surendran Serial
இவர்களை தொடர்ந்து, கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்து வந்த சங்கீதா மற்றும் அரவிந்த் ஆகியோர் காதலிப்பதை உறுதி செய்தனர். சங்கீதா ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நடித்தவர். அரவிந்த் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'அய்யனார் துணை' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
VJ Sriya Surendran
இவர்களை தொடர்ந்து, தற்போது மற்றொரு சின்னத்திரை நடிகையான ஸ்ரேயாவுக்கு காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Vijay tv Serial Actress Sriya Surendran
ஸ்ரேயா சுரேந்தரன், கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த 'செல்லமா' சீரியலில், மேக்னா என்கிற கதாபாத்திரத்தில்... வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். இவருடைய நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இப்போது தான் அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
என் வெற்றிக்கு காரணம் இது தான்! 2 விட்டுக்கொடுக்க கூடாத விஷயங்கள்; பெண்களை ஊக்கப்படுத்திய நயன்தாரா!
Chellamma Serial actress Sriya Surendran
ஸ்ரேயா சுரேந்தரன், சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். இதன் பின்னர் செல்லமா சீரியலில் இருந்து திவ்யா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஸ்ரேயா நடித்தார். நிச்சயதார்த்தமே மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.