விடாமுயற்சிய விடுங்க; சம்பவம் செய்ய ரெடியான குட் பேட் அக்லி! தரமான அப்டேட் வந்தாச்சு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் லீக் ஆகி உள்ளது.

குட் பேட் அக்லி அஜித்
நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் இன்னும் இரண்டே மாதத்தில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்திலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். விடாமுயற்சி படத்திலேயே இவர்களின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்ததால் குட் பேட் அக்லி படத்திலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி அப்டேட்
குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கே இந்த நிலைமையா? காத்து வாங்கும் தியேட்டர்கள்!!
குட் பேட் அக்லி டீசர்
குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் வரிசைகட்டி வந்த வண்ணம் உள்ளன. அதன்படி குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் நடித்த தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திச்குச்சு பத்திக்காதுடா’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அப்டேட் வெளியானது. அதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்துடன் குட் பேட் அக்லி டீசரும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போனது.
டீசர் ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்கிற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 2வது வாரத்தில் அப்படத்தின் டீசர் வெளிவர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று குட் பேட் அக்லி டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி எதிர்பார்த்த அளவு இல்லாததால் தற்போது ரசிகர்கள் கவனம் முழுக்க குட் பேட் அக்லி திரைப்படம் பக்கம் திரும்பி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் கில்லி போல் சொல்லி அடிக்கும் விஜய்; சொதப்பும் அஜித்! காரணம் என்ன?