நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்த நிலையில், அப்படத்திற்கு இரண்டாம் நாளிலேயே கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதாக ட்ரோல் செய்யப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமாரின் 62வது படம் விடாமுயற்சி. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அவர் சொன்ன கதையில் லைகாவுக்கு திருப்தி அளிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, இயக்குனர் மகிழ் திருமேனியை இயக்குனராக கமிட் செய்தனர். கைவசம் கதை இல்லாததால் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு கதையை மூன்று மாதத்தில் தயார் செய்தார் மகிழ். அதற்கு அஜித்தும் ஓகே சொன்னதால் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.

பின்னர் அஜர்பைஜான் நாட்டில் சுமார் இரண்டு மாதங்கள் இடைவிடாமல் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு, அங்கு ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாமல் நாடு திரும்பினர். இதனால் மீண்டும் நான்கு மாதம் ஷூட்டிங்கே நடைபெறாமல் இருந்த நிலையில், பின்னர் விறுவிறுவென ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ரீமேக் உரிமையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... சோலி முடிஞ்சது; பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கிய விடாமுயற்சி - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

பின்னர் ஒருவழியாக ரீமேக் உரிமையை 11 கோடி வாங்கி பல்வேறு தடைகளை கடந்து விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆனது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் படம் ரிலீஸ் ஆனதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் எதிர்பார்த்த மாஸ் சீன்கள் எல்லாம் இல்லாமல் ஒரு ஆக்‌ஷன் படத்தை கொடுத்து ரசிகர்களை அப்செட் ஆக்கி இருக்கிறார்கள். அப்படம் குறித்த ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதோ என்கிற பயத்தில் 1000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறார் ஒரு ரசிகர். ஆனால் படம் ரிலீஸ் ஆகி விமர்சனம் சுமாராக வந்ததால், ஆன்லைனிலேயே அப்படத்திற்கு டிக்கெட் புக் செய்யப்படாமல் காத்துவாங்குவதாக அவரின் நண்பர்கள் சிலர் டிக்கெட் புக்கிங் ஆப்பை காட்டி அந்த அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். அந்த அஜித் ரசிகரும் அது தொழில்நுட்ப கோளாறாக இருக்கும் என சொல்லி முட்டுக் கொடுத்தாலும் அவரை மற்ற நண்பர்கள் ரவுண்டு கட்டி கலாய்க்கும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் கில்லி போல் சொல்லி அடிக்கும் விஜய்; சொதப்பும் அஜித்! காரணம் என்ன?