பாக்ஸ் ஆபிஸில் கில்லி போல் சொல்லி அடிக்கும் விஜய்; சொதப்பும் அஜித்! காரணம் என்ன?
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி படத்துக்கும் விஜய்யின் கடைசி படத்துக்குமான பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஒப்பிட்டு பார்க்கலாம்.

அஜித் vs விஜய்
சமகாலத்தில் சினிமாவில் அறிமுகமான நடிகர்களுக்கு எப்போதுமே போட்டி இருக்கும். உதாரணத்திற்கு எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோர் வரிசையில் சமகால நடிகர்களாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் தான் அஜித் - விஜய். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் தற்போது வரை எலியும், பூனையுமாக சண்டை போட்டு வருகிறார்கள்.
தல - தளபதியின் பாக்ஸ் ஆபிஸ் போட்டி
தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் விமர்சன ரீதியாக எவ்வளவு சுமாராக இருந்தாலும் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தான் அப்படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது அதன் வசூல் தான். அந்த வகையில் சமீப காலங்களாக வெளியான அஜித் - விஜய் படங்களை ஒப்பிட்டு பார்த்தால் அதில் விஜய்யை விட அஜித் பாக்ஸ் ஆபிஸில் அதளபாதாளத்தில் இருக்கிறார். நடிகர் அஜித் நடித்து இதுவரை அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது துணிவு தான். அப்படம் 250 கோடி வரை வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்.... சோலி முடிஞ்சது; பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கிய விடாமுயற்சி - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?
அஜித்தை மிஞ்சிய விஜய்
ஆனால் விஜய் படங்கள் அதை விட டபுள் மடங்கு வசூலித்து வருகின்றன. இதுவரை விஜய் கெரியரிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது லியோ தான். அப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அடுத்தபடியாக கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூலை வாரிக்குவித்திருந்தது. விஜய் - அஜித் படங்கள் என்றாலே அதன் முதல் நாள் வசூல் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் நடிகர் விஜய் கடைசியாக நடித்த இரண்டு படங்களுமே முதல் நாளில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.
விடாமுயற்சி வசூல்
ஆனால் அஜித்துக்கு முதல் நாளில் 50 கோடி வசூல் என்பதே எட்டாக்கனியாக உள்ளது. அதை விடாமுயற்சி படமாவது தகர்த்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படம் முதல் நாளில் உலகளவில் 35 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் விஜய்யின் கோட் படத்தை காட்டிலும் சுமார் 90 கோடி வசூலில் பின்வாங்கி இருக்கிறது விடாமுயற்சி. இப்படத்தின் விமர்சனங்களும் சுமாராக இருப்பதால் 200 கோடி வசூலிப்பதே கேள்விக்குறி தான் என கூறப்படுகிறது.
அஜித் வசூலில் சரிவை சந்திப்பது ஏன்?
அஜித் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு, அஜித்தும் ஒரு காரணம் தான், மற்ற நடிகர்கள் போல் ஆடியோ லாஞ்ச் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என சென்றுவிடுகிறார். அவர் தன் படத்துக்காக இறங்கி வந்து புரமோஷன் செய்தால் தான் பாக்ஸ் ஆபிஸில் மற்ற நடிகர்களைப்போல் அடுத்தடுத்த உயரங்களை எட்ட முடியும். இல்லையெனில் சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற நடிகர்கள் அஜித்தை ஓரம்கட்டிவிடுவார்கள்.
இதையும் படியுங்கள்.... லாங்குவேஜ் ஒன்னும் புரியல; டப்பிங் பாத்த மாதிரி இருந்துச்சு; விடாமுயற்சி பாத்துட்டு புலம்பும் ரசிகர்கள்!