- Home
- Cinema
- லாங்குவேஜ் ஒன்னும் புரியல; டப்பிங் பாத்த மாதிரி இருந்துச்சு; விடாமுயற்சி பாத்துட்டு புலம்பும் ரசிகர்கள்!
லாங்குவேஜ் ஒன்னும் புரியல; டப்பிங் பாத்த மாதிரி இருந்துச்சு; விடாமுயற்சி பாத்துட்டு புலம்பும் ரசிகர்கள்!
Vidaamuyarchi is Difficult to Watch due to unable to Understand Language : படம் முழவதும் ஒரு சிலர் மட்டுமே தமிழில் பேசி நடித்திருந்ததால் விடாமுயற்சி படம் பார்த்த ரசிகர்கள் லாங்குவேஜ் புரியாததால் புலம்பி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

லாங்குவேஜ் ஒன்னும் புரியல; டப்பிங் பாத்த மாதிரி இருந்துச்சு; விடாமுயற்சி பாத்துட்டு புலம்பும் ரசிகர்கள்!
Vidaamuyarchi is Difficult to Watch due to unable to Understand Language : அஜித் குமார் மற்றும் மகிழ் திருமேனி காம்பினேஷனில் உருவான படம் தான் விடாமுயற்சி. இந்த ஜோடி இந்தப் படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படம் பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் படம் முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தோட ஓபனிங்கில் காதல் காட்சி என்று மொக்கையான சில சீன்களை வைத்திருக்கிறார்கள்.
விடாமுயற்சி பாத்துட்டு புலம்பும் ரசிகர்கள்
அதுமட்டுமின்றி அஜித்தின் கெட்டப்பை மாற்றி மாற்றி காட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் அவருக்கு செட்டே ஆகவில்லை. படம் முழுவதும் அஜித்தை டம்மியாக காட்டி கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் அஜித்தை மாஸ் ஹீரோவாக காட்டி அஜித்தின் இமேஜை ஸ்பாயில் பண்ணியிருக்கிறார் இயக்குநர். விடாமுயற்சி படத்தில் ஒரு சிலர் தமிழ் நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தாலும் கூட படம் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டு அஜர்பைஜானி மொழி படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமே வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.
அஜித் குமார் - மகிழ் திருமேனி காம்பினேஷனில் உருவான விடாமுயற்சி
ஆனால், படம் பார்க்கும் ஆடியன்ஷிற்கு எப்படி தெரிந்திருக்கும். என்னதான் சப் டைட்டில் போடப்பட்டாலும் இது டப்பிங் பார்க்கும் படமாகவே பார்க்கப்பட்டுள்ளது. அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர்கள் வேகமாக பேசும் போது கூட எனக்கு புரியவில்லை கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று அஜித் சொல்கிறார். அதற்கு அந்த நாட்டு போலீஸ்காரர் கூகுளில் வாய்ஸ் கொடுத்து டிரான்ஸ்லேட் செய்து காட்டுகிறார். இப்படி எந்த படமும் தமிழ் சினிமாவில் எடுக்கப்படவில்லை.
பப்ளிசிட்டி தேடிக் கொண்ட விடாமுயற்சி
விஜயகாந்த் படங்களில் கூட டிரான்ஸ்லேட்டர் உடன் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லவேளை இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் வசூலில் மொக்கை வாங்கியிருக்கும். இந்த வருடம் தொடங்கியதிலிருந்து அஜித்தை பற்றியும் விடாமுயற்சி படத்தை பற்றியும் பேசுற மாதிரி தான் அப்டேட் வந்து கொண்டிருந்தது. இவ்வளவு ஏன் படம் ரிலீஸாவதற்கு முதல் நாள் கூட தனியே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.
ரெஜினாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அஜித்துக்கு இல்லை
படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்த ரெஜினாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட அஜித்திற்கு கொடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களின் மன வருத்தம். அந்தளவிற்கு ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ரெஜினா கேங்ஸ்டர்ஸ் நடித்திருந்தார்கள். இதில் வில்லியான ரெஜினா, அஜித்திடம் சென்று உன்னை கொலை செய்ய சொன்னது உன்னுடைய மனைவி என்றும், த்ரிஷாவிடம் சென்று உன்னை கொல்ல சொன்னது உன்னுடைய ஃப்ரண்ட் அனு என்று சொல்வதும் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது.
அஜித் - த்ரிஷா காதல் காட்சிகள்
இந்தப் படத்தில் த்ரிஷா குறைவான காட்சிகளில் தான் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் காதலிக்கிறார்கள். அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். கர்ப்பமாகிறார், இதையடுத்து கரு கலைகிறது. மேலும், அவரால் இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை வருகிறது.
இதை தொடர்ந்து இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்கிறார்கள். கடைசியாக ஒரு நீண்ட தூர பயணம் செய்ய அஜித் கேட்க, த்ரிஷாவும் ஓகே சொல்லி டிராவல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இது போன்று ஒரு படம் தமிழில் வெளியானது. அது வேறு எந்த படமும் இல்லை. அது தான் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா. இந்தப் படத்தின் தழுவல்களும் விடாமுயற்சி படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் விடாமுயாற்சி படமானது முதல் நாளில் மட்டும் ரூ.21.5 கோடி வசூல் குவித்திருக்கிறது. இது 2 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த துணிவு படத்தின் முதல் வசூலை விட ரொம்பவே குறைவு தான். இன்றைய நிஜ வாழ்க்கையில் பணத்திற்காக கணவன் மனைக்கிடையில் நடக்கும் சம்பவங்களும், இருவரும் தங்களுக்கு தெரியாமல் 3ஆவது நபருடன் பழகி வருவதையும் இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. கடைசியில் ஒருவர் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கும் காதலுக்கும் உள்ள மதிப்பை இந்தப் படம் புரிய வைக்கிறது. மற்றபடி விடாமுயற்சி படத்திற்கு இன்னும் முயற்சி தேவை தான்.